பக்கம் எண் :

282யுத்த காண்டம் 

அரக்கன்   பின்னே -  களவுத்தன்மையுடைய அரக்கனாகிய
இராவணனுக்கு தம்பியாக; தோன்றிய  கடமைதீர  -   பிறந்த
அந்தத்  தொடர்பு  தீரும்படி;  இளையவற்  கவித்தமோலி -
உனது  தம்பியான    பரதனுக்கு   நீ    அணிவித்த   திருவடி
நிலைகளான  மகுடத்தை;   என்னையும் கவித்தி என்றான் -
எனக்கும் அணிவிப்பாயாக என்றான்.
 

இலங்கை   அரசை   நாடி இங்கு வீடணன் வந்தவனல்லன்.
இராமன்   திருவருளே   வீடணன்   வேண்டுவது   என்பதால்
இலங்கைச் செல்வத்தை  எனக்கு   அளித்தாய்    என்று  கூற
மாட்டான். அளவற்ற, அழியாத  பெரிய செல்வம் என வீடணன்
குறிப்பிட்டது இராமனைச்  சரணடைந்து  அவன்  திருவருளைப்
பெற்றதே  என்பதால்   'என்றும்   வீயா  அளவறு  பெருமைச்
செல்வம் அளித்தனை' என்றான்.  இலங்கைச் செல்வம் என்றும்
வீயாததோ, அளவற்றதோ பெருமைக்குரியதோ அன்று. 
 

(142)
 

இராமபிரான் வீடணனைத் தம்பியாகக் கொண்டு கூறுதல்
  

6507.

'குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு; பின், குன்று

சூழ்வான் 

மகனொடும், அறுவர்ஆனேம்; எம்முழை அன்பின் 

வந்த

அகன் அமர் காதல் ஐய! நின்னொடும் எழுவர் 

ஆனேம்;

புகல் அருங் கானம் தந்து, புதல்வரால் பொலிந்தான்

நுந்தை.'

 

குகனொடும்  ஐவர்  ஆனேம் முன்பு - குகனுடன் சேர்த்து
நாங்கள் ஐந்து பேர் சகோதரர்கள் ஆனோம் இது முன்பு நிகழ்ந்தது;
பின் குன்று சூழ்வான் மகனொடும்- அதன் பின் மேருமலையைச்
சுற்றிவரும் சூரியனது மகனான சுக்கிரீவனுடன்; அறுவர் ஆனேம் -
சகோதரர்   ஆறுபேர்   ஆயினோம்;  எம்முழை அன்பின் வந்த
அகன்  அமர்  காதல் ஐய
-  எங்களிடம் அன்பு கொண்டு வந்த
உள்ளத்திலே   நிறைந்த      அன்புடையவனே;     நின்னொடும் 
எழுவர்ஆனேம்
- உன்னுடன்  சேர்த்து  சகோதரர்கள்  ஏழுபேர்
ஆயினோம்; புகல் அரும் கானம்தந்து -   எவரும்   புகுதற்கரிய
கானக வாழ்வை எனக்குத் தந்து; நுந்தை புதல்வரால்