பக்கம் எண் :

 வீடணன் அடைக்கலப் படலம் 283

பொலிந்தான்-  உனது   தந்தையாகிய தயரதன் புதல்வர்களால்
நிறைவு பெற்றுவிட்டான்.
 

உன்னுடன்   சேர்ந்து நாம் ஏழுபேர் ஆய்விட்டோம். தந்தை
என்று கூறாமல் தயரதனை   உனதுதந்தை  என்று பொருள் பெற
'நுந்தை' என்றது நோக்கத்தக்கது. எனக்குக்   கானக  வாழ்வைத்
தந்து மேலும் மூன்று  புதல்வர்களை   உன்   தந்தை   பெற்றுப்
பொலிந்தார்    என்பதை  'புதல்வரால்   பொலிந்தான்   நுந்தை'
என்று கூறிய நயம் நோக்கத்தக்கது. அகனமர்  காதல்-மனமார்ந்த
நேயம். 
 

(143)
 

வீடணன் இராமபிரானது திருவடி நிலைகளைச் சூடிக்
கொள்ளுதல்
 
 

6508.

'நடு இனிப் பகர்வது என்னே? நாயக! நாயினேனை,
"உடன் உதித்தவர்களோடும் ஒருவன்" என்று

உரையாநின்றாய்;

அடிமையின் சிறந்தேன்' என்னா, அயிர்ப்பொடும் 

அச்சம் நீங்கி, 

தொடு கழல் செம் பொன் மோலி சென்னியில்

சூட்டிக் கொண்டான்.

 

நாயக!   நடு    இனிப்    பகர்வது என்னே-  எனது
தலைவனே! இடையிலே நான்   என்ன   சொல்ல   இருக்கிறது;
நாயினேனை -   நாயினும்  கடையனான அடியேனை; உடன்
உதித்தவர்களோடும் 
- உனக்குத்   தம்பிமார்களாய்ப் பிறந்த
பரதன், இலக்குவன்,  சத்துருக்கன்   ஆகியவருடன்;  ஒருவன்
என்று உரையா நின்றாய்
- என்னையும்  ஒரு  தம்பி  என்று
கூறினாய்; அடிமையில்  சிறந்தேன்   என்னா -   உனக்கு
அடிமை  செய்வதில்   சிறந்தவன்   ஆனேன்   என்று  கூறி;
அயிர்ப்பொடும் அச்சம்  நீங்கி -  ஐயத்தோடு,  அச்சமும்
நீங்கப் பெற்றவனாய்;   தொடுகழல் செம்பொன்  மோலி -
இராமபிரான் திருவடிகளில் தொடும்  பாதுகைகளாகிய  அழகிய
மகுடத்தை; சென்னியில்   சூட்டிக்கொண்டான்-   தனது 
தலையிலே சூட்டிக்கொண்டான்.
 

'நின்னொடும்   எழுவர்   ஆனேம்'   என்று  இராமபிரான்
கூறியதைக்   கேட்ட   வீடணன்,    தான்   இராமபிரானுக்குத்
தொண்டனாய் விட்ட  மகிழ்ச்சியில்   இராமனை  'நாயக' என்று
அழைத்துத் தனது எளிமை தோன்றத்தன்னை 'நாயினேன்' எனக்
குறிப்பிட்டான்.  தான்   நினைத்து   வந்ததற்கு  மேலே உடன்
பிறந்தவர்களோடு ஒருவனாக இராமன்