கூறியதால் அதுவரை இருந்த ஐயமும் அச்சமும் நீங்கப் பெற்றான் என்பதனால் 'அயிர்ப்பொடும் அச்சம் நீங்கி' என்றார். "அடித்தலம் இரண்டையும் அழுத கண்ணினன், முடித்தலம் இவை என முடியில் சூடினான்' எனப் பரதனும் இவ்வாறே சூடிக்கொண்டதை முன்பும் (கிளை 136) கூறினார். |
(144) |
6509. | திருவடி முடியின் சூடி, செங் கதிர் உச்சி சேர்ந்த |
| அரு வரை என்ன, நின்ற அரக்கர்தம் அரசை |
| நோக்கி, |
| இருவரும் உவகை கூர்ந்தார்; யாவரும் இன்பம் |
| உற்றார்; |
| பொரு அரும் அமரர் வாழ்த்தி, பூமழை |
| பொழிவதானார். |
|
திருவடி முடியில் சூடி - இராமபிரானது பாதுகைகளை முடியிலே சூடிக்கொண்டு; செங்கதிர் உச்சி சேர்ந்த அருவரை என்ன நின்ற - செந்நிறக் கிரணங்களை உடைய சூரியனைத்தன் சிகரத்தில் கொண்ட அரியதொரு மலை என்னும்படி நின்றவனுமாகிய; அரக்கர்தம் அரசை நோக்கி - அரக்கர் குடிக்கே அரசனாகத்திகழும் வீடணனைப் பார்த்து; இருவரும் உவகை கூர்ந்தார் - இராமலக்குவராகிய இருவரும் மிக மகிழ்ந்தனர்; யாவரும் இன்பம் உற்றார் - அங்கிருந்த எல்லோரும் இன்பம் எய்தினர்; பொருவரும் அமரர் வாழ்த்தி - தமக்கு நிகர் வேறு எவருமில்லாத தேவர்கள் எல்லாம் வாழ்த்தி; பூமழை பொழிவதானார் - மலர்மாரி பொழியலானார்கள். |
தலைமீது இராமபிரானது பாதுகைகளை வைத்துக்கொண்டு நின்ற வீடணனுக்கு தனது சிரத்திலே சூரியனைக் கொண்டிருக்கும் மலை உவமை ஆயிற்று. மலை வீடணனுக்கும் செங்கதிர் பாதுகைகளுக்கும் உவமை. இருவரும் என்றது இராம இலக்குவர்களை. யாவரும் என்றது சுற்றும் நின்ற வானர சேனையை. வீடணர் இராமபிரானுடன் சேர்ந்துவிட்டதால் இராவணன் வீழ்ச்சி உறுதியாய் விட்டது என்பதால் தேவர்கள் மகிழ்ந்து. மலர்மழை சொரிந்து வாழ்த்தினர் என்க. |
(145) |
6510. | ஆர்த்தன-பரவை ஏழும், அவனியும், அமரர் நாடும், |
| வார்த் தொழில் புணரும் தெய்வ மங்கல முரசும் |
| சங்கும்: |