| தூர்த்தன, கனக மாரி; சொரிந்தன, நறு மென் |
| சுண்ணம்; |
| போர்த்தது வானத்து, அன்று, அங்கு, எழுந்தது |
| துழனிப் பொம்மல். |
|
பரவை ஏழும் அவனியும் ஆர்த்தன- ஏழுகடல்களும், மண்ணுலகமும், விண்ணுலகமும் ஆரவாரம் செய்தன; வார்த்தொழில் புரியும் தெய்வ மங்கல முரசும் சங்கும்- வாரால் கட்டப்பட்ட தெய்வீக மான மங்கல முரசுகள் முழங்கின; சங்குகளும் முழங்கின; கனகமாரி தூர்த்தன - வானவர் பொற்காசுகளை எங்கும் சொரிந்தனர்; நறுமென் சுண்ணம் - நல்ல மணமுள்ள மென்மையான வாசனைப்பொடிகள்; வானத்து அன்று போர்த்தது - வானத்தையே அன்று மூடிவிட்டது; அங்குத் துழனிப்பொம்மல் எழுந்தது - அங்கு மிகுந்த ஆரவாரம் எழலாயிற்று. |
வார்த்தொழில்-வாரால் கட்டப்பட்ட தொழில் முரசு தெய்வத்தன்மை வாய்ந்தது. மங்கலமானது என்பதால் 'தெய்வமங்கல முரசு' எனப்பட்டது. சுண்ணம் - மணப்பொடி. துழனிப் பொம்மல் - ஆரவாரத்தின் மிகுதி. |
(146) |
6511. | 'மொழிந்த சொல் அமிழ்தம் அன்னாள் திறத்தினின் |
| முறைமை நீங்கி |
| இழிந்த என் மரபும் இன்றே உயர்ந்தது' என்று |
| ஏம்பலுற்றான், |
| செழுந் தனி மலரோன்; பின்னை, 'இராவணன் |
| தீமைச் செல்வம் |
| அழிந்தது' என்று, அறனும், தன் வாய் ஆவலம் |
| கொட்டிற்று அன்றே. |
|
செழும் தனி மலரோன் - செழிப்பான சிறந்த தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமதேவன்; மொழிந்த சொல் அமுதமன்னான் திறத்தினில் - அமுதம் போன்ற மொழிகளைப் பேசும் சீதாபிராட்டி காரணமாக; முறைமை நீங்கி - அற நெறியிலிருந்து நீங்கி; இழிந்த என் மரபும் - தாழ்ந்து விட்ட எனது குலமும்; இன்றே உயர்ந்தது - இன்று இழிவு தீர்ந்து உயர்வடைந்தது; என்று ஏம்பலுற்றான் - என மகிழ்வடைந்தான்; பின்னை, இராவணன் தீமைச் செல்வம் - பின்பு, இராவணனுடைய தீமையான செல்வம்; அழிந்தது என்று - இன்றோடு அழிந்து தீர்ந்தது என்று; அறனும் |