தன்வாய் ஆவலம் கொட்டிற்றன்றே - அறக்கடவுளும் தனது வாயால் ஆரவாரம் செய்தது. |
மலரோன்-பிரமன். 'ஏம்பலுற்றான்' என்பதற்கு 'இடரின் தீர்ந்தான்' என்ற பாடமும் பொருந்துவதே. அறன்-அறம் (தருமதேவதை) ஆவலம் கொட்டல்-ஆரவாரித்தல். |
(147) |
வீடணனுடன் பாடிவீட்டை வலம் வர இராமன் பணித்தல் |
6512. | இன்னது ஓர் செவ்வித்து ஆக, இராமனும், |
| 'இலங்கை வேந்தன்- |
| தன் நெடுஞ் செல்வம் தானே பெற்றமை பலரும் |
| கேட்ப, |
| பல் நெடுந் தானை சூழ, பகலவன் சேயும் நீயும், |
| மன் நெடுங் குமர! பாடிவீட்டினை வலம் செய்க!' |
| என்றான். |
|
இன்னதோர் செவ்வித்தாக - இவ்வாறு நிகழும் சமயத்தில்; இராமனும்- இராமபிரானும் (இலக்குவனை நோக்கி); மன் நெடுங்குமர- நிலைபெற்ற சிறந்த அரசகுமாரனே!; இலங்கை வேந்தன் - இலங்கை அரசனாகிய வீடணன்; தன் நெடும் செல்வம் - தனக்குரிய இலங்கையின் அரசுச் செல்வத்தை; தானே பெற்றமை - தானே பெற்றதனை; பலரும் கேட்ப - எல்லோரும் கேட்டுத் தெரிந்து கொள்ள; பல் நெடும் தானை சூழ - பெரிய சேனை சூழ்ந்து வர; பகலவன் சேயும் நீயும்- சூரிய குமாரனான சுக்கிரீவனும் நீயும்; பாடி வீட்டினை வலம் செய்க என்றான் - நமது வானரப்படை தங்கியுள்ள பாடிவீட்டை வலம் வருவீராக என்றான். |
செவ்வி-சந்தர்ப்பம் (சமயம்) தானையின் பெருமை புலப்பட "பல்நெடும்தானை" என்றார். பாடிவீடு-பாசறை. முடிசூடிய பின் நகர்வலம் வருதல் மரபு என்பதால் 'பாடி வீட்டினை வலம் செய்க' என்றான். மன்-மன்னன். |
(148) |
6513. | அந்தம் இல் குணத்தினானை அடியிணை- |
| முடியினோடும் |
| சந்தன விமானம் ஏற்றி, வானரத் தலைவர் தாங்க, |