| 'இந்திரற்கு உரிய செல்வம் எய்தினான் இவன்' |
| என்று ஏத்தி, |
| மந்தரத் தடந் தோள் வீரர், வலம் செய்தார், தானை |
| வைப்பை. |
|
அந்தம் இல் குணத்தினானை - அளவில்லாத நற்குணங்களை உடைய வீடணனை; அடியிணை முடியினோடு - இராமபிரானுடைய பாதுகைகளாகிய திருமுடியுடனே; சந்தன விமானம் ஏற்றி - சந்தன மரத்தால் செய்த விமானத்திலே ஏறச் செய்து; வானரத்தலைவர் தாங்க - அந்த விமானத்தை வானரப் படைத்தலைவர்கள் தாங்கி வர; இந்திரற்கு உரிய செல்வம் - இந்திரனுடைய செல்வத்துக்கு நிகரான அரசுச்செல்வத்தை; எய்தினான் இவன் என்று ஏத்தி - வீடணன் பெற்றான் என்று போற்றி; சுந்தரத்தடந் தோள் வீரர் - அழகிய அகன்ற தோள்களை உடைய வீரர்களான இலக்குவனும் சுக்கிரீவனும்; தானை வைப்பை வலம் செய்தார்- வானரப்படை தங்கியுள்ள பாடி வீட்டைச் சுற்றி வலம் செய்தனர். |
வீடணன் நற்குணம் நிறைந்தவன் ஆதலின் "அந்தம் இல்குணத்தினான்" என்று சிறப்பிக்கப்பட்டான். அரசப் பதவிக்கேற்ப சிறந்த சந்தன மரத்தால் செய்யப்பட்ட விமானம். தானை வைப்பு-படைகள் தங்கியுள்ள பாசறை. இந்திரற்குரிய செல்வம் இந்திரனது செல்வத்துக்குச் சமமானது இலங்கையின் ஆட்சிச் செல்வம் என்னும் பொருள் உடையது. |
(149) |
பெரியோர் மகிழ்ச்சி |
6514. | தேடுவார் தேட நின்ற சேவடி, தானும் தேடி |
| நாடுவான், அன்று கண்ட நான்முகன் கழீஇய நல் நீர் |
| ஆடுவார் பாவம் ஐந்தும் நீங்கி, மேல் அமரர் ஆவார்; |
| சூடுவார் எய்தும் தன்மை சொல்லுவார் யாவர்? |
| சொல்லீர். |
|
தேடுவார் தேட நின்ற சேவடி - ஞானிகளும் அடியார்களும் தேடியும் காணாத பரமனது திருவடிகளை; தானும் தேடி நாடுவான்- தானும் தேடி அடைய விரும்பியவனாய்; அன்று கண்ட நான்முகன்- திருவிக்கிரமனாக வளர்ந்த திருமாலின் திருவடிகள் அப்போது கண்ட பிரமன்; கழிஇய நன்னீர் ஆடுவார்- அத்திருவடிகளைத் திருமஞ்சனம் செய்த நல்ல நீரிலே |