மூழ்குபவர்கள்; பாவம் ஐந்தும் நீங்கி - பாவங்கள் ஐந்தும் நீங்கப்பெற்றவராய்; மேல் அமரர் ஆவார் - விண்ணுலகத்துத் தேவர்கள் ஆவார் என்றால்; சூடுவார் எய்தும் தன்மை - அந்தத் திருவடிகளைத் தலையில் சூடிக் கொள்பவர்களின் சிறந்த தன்மையை; யாவர் சொல்லுவார் சொல்லீர் - யார் சொல்ல வல்லவர் சொல்லுங்கள். |
தேடுவார்-பரமனது பாதத்துணையைத் தேடும் பக்தரும், ஞானிகளுமாவார். தேடநின்ற சேவடி-அத்தகைய ஞானிகளும் இன்றும் அடைய இயலாத திருவடிகள் என்பது பொருள். அன்று-திருமால் திருவிக்கிரம் அவதாரம் செய்த காரணம். |
(150) |
6515. | 'இற்றை நாள் அளவும், யாரும், இருடிகள், |
| இமையோர், ஞானம் |
| முற்றினார், அன்பு பூண்டார், வேள்விகள் முடித்து |
| நின்றார், |
| மற்று மா தவரும், எல்லாம், வாள் எயிற்று இலங்கை |
| வேந்தன் |
| பெற்றது ஆர் பெற்றார்!' என்று வியந்தனர், |
| பெரியோர் எல்லாம். |
|
பெரியோர் எல்லாம் - வீடணன் பெற்ற பெருமையை உணர்ந்த உலகத்துப் பெரியவர்கள் எல்லாம்; இற்றை நாள் அளவும்- இந்த நாள் வரையும்; இருடிகள், இமையோர் யாரும்- முனிவர்களும், தேவர்களும் எவரும்; ஞானம் முற்றினார் அன்பு பூண்டார் - ஞானத்தில் முதிர்ந்தவர்கள், பக்தி பூண்டு ஒழுகுபவர்கள்; வேள்விகள் முடித்து நின்றார்- சிறந்த வேள்விகளைச் செய்து நிறைவேற்றியவர்கள்; மற்று மாதவரும் எல்லாம் - மற்றும் சிறந்த தவமுடைய யாவரும் ஆகிய இத்தகைய யாவரும்; வாள் எயிற்று இலங்கை வேந்தன் - ஒளிபொருந்திய பற்களை உடைய இந்த இலங்கை வேந்தனான வீடணன்; பெற்றது ஆர் பெற்றார் - இந்தப் பேற்றினை யார் பெற்றார்கள்; என்று வியந்தனர் - என்று கூறி வியப்படைந்தார்கள். |
இருடிகள்-முனிவர்கள் (ரிஷி என்ற வடசொல்லின் தமிழ் வடிவம்) இமையோர்-தேவர். ஞானம் முற்றினார்-ஞானத்தில் சிறந்த ஞானிகள் அன்பு பூண்டார்-பக்தி மிக்கவர்கள். அரக்கனாய்ப் பிறந்தும் சிறந்த பேறு பெற்றான் என்பதால் வீடணன் 'வாள் எயிற்று இலங்கை வேந்தன்' எனக் குறிப்பிட்டார். |
(151) |