என்று எண்ணி - சூரியன் தனது கதிர்கள் வெப்பம் மிக்கன என நினைத்து; தீர்ந்தனன் - தனது கிரணங்களைச் சுருங்கச் செய்தான் மறைந்தான். |
தந்தனன் - தந்து முற்றெச்சம். இலங்கை வேந்தனான வீடணனை வெப்பமான கதிர்கள் வருத்தும் என்பதால் சூரியன் 'தன் கதிர் சிந்தின வெய்ய" என்று நினைத்து கதிர்களைச் சுருக்கிக் கொண்டு மறைந்தான் என்பது கருத்து. இது தற்குறிப்பேற்றவணி. |
(1) |
அந்தி மாலையின் தோற்றம் |
6517. | சந்தி வந்தனைத் தொழில் முடித்து தன் நெடும் |
| புந்தி நொந்து, இராமனும் உயிர்ப்ப, பூங் கணை |
| சிந்தி வந்து இறுத்தனன், மதனன்; தீ நிறத்து |
| அந்தி வந்து இறுத்தது; கறுத்தது அண்டமே. |
|
சந்தி வந்தனைத் தொழில் முடித்து - (சூரியன் மறைந்ததும் மாலை நேரம் என்பதால் இராமபிரான்) சந்தியாவந்தனம் செய்து முடித்து); தன் நெடும் புந்தி நொந்து - தனது நெடிய மனம் நொந்து; இராமனும் உயிர்ப்ப - இராமபிரானும் (சீதையைப் பிரிந்த துயரால்) பெருமூச்சு விட; மதனன் பூங்கணை சிந்திவந்து - மன்மதனும் மலரம்புகளை எய்து கொண்டு வந்து; இறுத்தனன் - அங்கு தங்கலாயினான்; தீநிறத்து அந்திவந்து இறுத்தது - நெருப்புப் போன்ற நிறத்தை உடைய அந்தி மாலை வந்தடைந்தது; அண்டம் கறுத்தது - (அதனால்) வானம் இருண்டு கறுத்தது. |
சந்தி வந்தனை - சந்தியா காலத்தில் செய்யும் வழிபாடு (சந்தியாவந்தனம்) நெடுமை - இங்குப் பெருமை. புந்தி - மனம். மதனன் - மன்மதன். |
(2) |
6518. | மாத் தடந் திசைதொறும் மறைந்த வல் இருள் |
| கோத்தது, கருங் கடல் கொள்ளை கொண்டென; |
| நீத்த நீர்ப் பொய்கையில் நிறைந்த நாள்மலர் |
| பூத்தென, மீன் குலம் பொலிந்தது, அண்டமே. |
|
மாத்தடந்திசை தொறும் - (பகல் முழுதும் பரிதிக்குப் பயந்து) பெரியபரந்த திசைகள் தோறும் சென்று; மறைந்த வல் இருள் - மறைந்திருந்த வலிய இருளானது; கருங்கடல் கொள்ளை கொண்டென- கரிய கடல் நீர் உலகத்தைக் கொண்டது போல; |