கோத்தது - வந்து கவிந்து கொண்டது; நீத்த நீர்ப் பொய்கையில்- நிறைந்த நீரையுடைய பொய்கையிலே; நிறைந்த நாண்மலர்பூத்தென- நிறைந்த அன்றலர்ந்தமலர்கள் பூத்தது போல; அண்டம் மீன் குலம் பொலிந்தது - வானத்திலே விண்மீன்கள் விளங்கின. |
நீத்தம் - வெள்ளம் நிறைந்த நீர் என்பது பொருள். |
(3) |
6519. | சில் இயல் கோதையை நினைந்து தேம்பிய |
| வில்லியைத் திரு மனம் வெதுப்பும் வெம்மையால், |
| எல்லியைக் காண்டலும் மலர்ந்த ஈட்டினால். |
| மல்லிகைக் கானமும், வானமும் ஒத்ததே. |
|
சில் இயல் கோதையை நினைந்து - சில வகைகளாக அழகு படுத்தும் கூந்தலையுடைய சீதா பிராட்டியை நினைத்து; தேம்பிய வில்லியை - வருந்துகின்ற வில்வீரனான இராமனை; திருமனம் வெதுப்பும் வெம்மையால் - அவனது அழகிய மனத்தை வெதுப்புகின்ற வெப்பத்தால்; எல்லியைக் காண்டலும் - இரவைக் கண்டவுடனே; மலர்ந்த ஈட்டினால்- மலர்ந்திருக்கும் தன்மையால்; மல்லிகைக் கானமும் வானமும் ஒத்தது - மல்லிகைக் காடும் விண்மீன்கள் பொலியும் வானத்தை ஒத்தது. |
சில் இயல் கோதை - சீதை. முடி, கொண்டை, சுருள், குழல், பனிச்சை என்று ஐந்து வகையாக அலங்கரித்தலால் "சில் இயல் கோதை" என்றார். கோதை - மலர் மாலை உவமையாகு பெயராகச் சீதையை உணர்த்தியது. வில்லி - இராமன் (வில் வீரன் என்பது பொருள்), எல்லி, இரவு. ஈடு - தன்மை. செம்மையான நினைக்கும் மனமாதலின் "திருமனம்" என்றார். |
(4) |
6520. | ஒன்றும் உட் கறுப்பினோடு, ஒளியின் வாள் உரீஇ, |
| 'தன் தனி முகத்தினால் என்னைத் தாழ்த்து அற |
| வென்றவள் துணைவனை இன்று வெல்குவேன்' |
| என்றது போல, வந்து எழுந்தது-இந்துவே. |
|
ஒன்றும் உட் கறுப்பினோடும் - பொருந்திய உள்ளத்தே பகைமையோடும்; ஒளியின் வாள் உரீஇ - ஒளியாகிய வாளை உருவிக் கொண்டு; தன்தனி முகத்தினால் - தனது ஒப்பற்ற முகத்தினாலே; என்னைத் தாழ்த்து - என்னைத் தாழ்ந்து போகச் செய்து; அறவென்றவள் - அடியோடு வெற்றி பெற்றவளாகிய சீதாபிராட்டியின்; துணைவனை இன்று வெல்குவேன்- |