துணைவனான இராமபிரானை இன்று நான் வெல்லுவேன்; என்றது போல - என்று கூறுவதுபோல; இந்து வந்து எழுந்தது- வானத்திலே சந்திரன் வந்து எழுந்தான். |
கறுப்பு - களங்கம் (பகைமை) உரீஇ- உருவி (சொல்லிசை அளபெடை). ஒளியின் வாள் - உருவகம். சீதையை வெல்ல வல்லமையற்ற சந்திரன், அவள் கணவனை இன்று வெல்வேன் என்றெழுந்தான் என்பது தற்குறிப்பேற்றம். |
(5) |
6521. | 'கண்ணினை அப்புறம் கரந்து போகினும், |
| பெண் நிறம் உண்டுஎனின், பிடிப்பல் ஈண்டு' எனா, |
| உள் நிறை நெடுங் கடல் உலகம் எங்கணும் |
| வெண் நிற நிலவு எனும் வலையை வீசினான். |
|
கண்ணினை அப்புறம்- கண்ணுக்குப் புலனாகாதபடி அப்புறத்தில்; கரந்துபோகினும்- மறைந்து சென்றாலும்; பெண் நிறம் உண்டெனில்- சீதை என்னும் பெண்ணின் உடல் இருக்குமானால்; பிடிப்பல் ஈண்டு எனா - இப்போதே பிடிப்பேன் என்று; உள் நிறை நெடுங்கடல்- உள்ளே நிறைந்த நீரையுடைய கடல் சூழ்ந்த; உலகம் எங்கணும்- இவ்வுலகம் எங்கும்; வெண் நிற நிலவு எனும் - வெண்மை நிறமான நிலவொளி என்னும்; வலையை வீசினான் - வலையைச் சந்திரன் வீசினான். |
கண்ணினை - கண்ணுக்கு; வேற்றுமை மயக்கம். நிலவை வலையாக உருவகம் செய்தார். 'இந்து'வலை வீசினான் என இயையும். |
(6) |
6522. | புடைக்கை வன் திரை எடுத்து ஆர்க்கும் போர்க் |
| கடல், |
| 'உடைக் கருந் தனி நிறம் ஒளித்துக் கொண்டவன், |
| அடைக்க வந்தான் எனை, அரியின் தானையால்; |
| கிடைக்க வந்தான்' எனக் கிளர்ந்தது ஒத்ததே. |
|
புடைக்கை வன்திரை எடுத்து - பக்கங்களிலுள்ள கைகளாகிய வலிய அலைகளை வீசி; ஆர்க்கும் போர்க் கடல் - ஆரவாரம் செய்து போர்புரிய வரும் கடலானது; உடைக் கரும் தனிநிறம் - என்னுடைய கருமையான ஒப்பற்ற நிறத்தினை; ஒளித்துக் கொண்டவன் - தான் கவர்ந்து வைத்துக் கொண்டவனாகிய இராமன்; அரியின் தானையால் - வானரங்களின் படையைத் |