துணைகளாகக் கொண்டு; எனை அடைக்க வந்தான்- என்னைத் தடுத்து அணைகட்ட வந்தான்; கிடைக்க வந்தான்- எனது கைக்கு அகப்படும்படி இப்போது வந்துவிட்டான்; எனக் கிளர்ந்தது ஒத்தது - என்று பொங்கி எழுந்தது போல் இருந்தது. |
அரியின்தானை - வானரப் படை. அடைக்க - தடுத்து அணைகட்ட. அலைகளை வீசிக் கொண்டு, கரையோடு மோத வந்த கடலை, கைகளை வீசி இராமனுடன் போரிட வந்ததை ஒத்திருந்தது என்பதால் "போர்க்கடல்' என்றார். கிடைக்க வந்தான் என மகிழ்ந்து கிளர்ந்தெழுந்தது என்பது கருத்து. தற்குறிப்பேற்றம். |
(7) |
6523. | மேல் உகத் தொகுதியால் முதிர்ந்த மெய் எலாம் |
| தோல் உகுத்தாலென, அரவத் தொல் கடல் |
| வாலுகத்தால் இடைப் பரந்த வைப்பு எலாம் |
| பால் உகுத்தாலென, நிலவு பாய்ந்ததால். |
|
மேல் உகத் தொகுதியால்- கடந்துபோன பல யுகங்களால்; முதிர்ந்த மெய் எலாம் - முதுமையடைந்த தன் உடலெல்லாம்; தோல் உகுத்தால் என - தோலை உரித்தது போல; அரவத் தொல்கடல்- பெரிய ஒலியையுடைய பழைமை வாய்ந்த கடல்; வாலுகத்தால் இடை பரந்த வைப் பெலாம் - மணல் குன்றுகளால் இடையே பரந்த இடமெல்லாம்; பால் உகுத்தால் என - பாலைச் சொரிந்தது போல்; நிலவு பாய்ந்தது- நிலவு பாய்ந்து பரவியது. |
முதிர்ந்த - முதிர்ச்சியுற்ற. அரவம் - ஓசை. தொல்கடல் - பழமையான கடல். வாலுகம் - மணற்குன்று. வைப்பு - இடம். உகுத்தல் - சொரிதல். உகத்தொகுதி - பலயுகங்களின் தொகுதி. விசும்பு தோல் உரித்தற்கு காரணம் கூறுவார் 'உகத் தொகுதியால் முதிர்ந்த மெய்" என்றார். மேலே இருந்து நிலவுதரையில் பாய்ந்தமைக்கு விசும்பு தோலுரித்ததையும் கரையெங்கும் நிலவொளி பரவியிருப்பதற்கு கடல் வாலுகத்தால் பாலைப் பொழிந்திருப்பதையும் உருவகம் செய்தார். |
(8) |
6524. | மன்றல்வாய் மல்லிகை எயிற்றின், வண்டுஇனம் |
| கன்றிய நிறத்தது, நறவின் கண்ணது, |
| குன்றின்வாய் முழையின்நின்று உலாய கொட்பது, |
| தென்றல் என்று ஒரு புலி உயிர்த்துச் சென்றதால். |
|
மன்றல்வாய் மல்லிகை எயிற்றின் - மணம் பொருந்திய மல்லிகை அரும்புகளாகிய பற்களையும்; வண்டினம் கன்றிய |