பக்கம் எண் :

294யுத்த காண்டம் 

நிறுத்தது- வண்டினமாகிய கரிய கோடுகளை உடைய உடலையும்;
நறவின் கண்ணது- தேனாகிய சிவந்த கண்களையும்;   குன்றின்
வாய் முழையின் நின்று
- மலையிடத்தே உள்ள குகையிலிருந்து;
உலாய கொட்பது - உலாவும் தன்மையுடையதுமாகிய; தென்றல்
என்று  ஒரு   புலி
-  தென்றல்  என்னும்   ஒரு  புலியானது;
உயிர்த்துச் சென்றது- பெருமூச்சுவிட்டபடி வந்தது.
 

தென்றல் - புலி; மல்லிகை பல்;   வண்டுகள்  -   புலியின்
கருங்கோடுகள் - இது முற்றுருவகம்.   தென்றலின் வருகையைப்
புலியின்    வருகைக்கு   உருவகித்துக்   கூறியநயம்   அறிந்து
மகிழ்தற்குரியது.   கன்றிய -   கறுத்த.  நறவு - தேன். முழை -
குகை. கொட்பு - உழல்தல், திரிதல். 
  

(9)
 

6525.

கரத்தொடும் பாழி மாக் கடல் கடைந்துளான்
உரத்தொடும், கரனொடும், உருவ ஓங்கிய
மரத்தொடும் தொளைத்தவன் மார்பில், மன்மதன்
சரத்தொடும் பாய்ந்தது, நிலவின் தாரை வாள்.
 

கரத்தொடும்பாழிமாக்கடல்   கடைந்துளான்  -   தனது
கைகளினாலே   வன்மைமிக்க   பெரிய   பாற்கடலைக் கடைந்த
வாலியினது; உரத்தொடும் கரனொடும்- மார்பையும், கரனையும்;
உருவ  ஓங்கிய மரத்தொடும்
- உயர்ந்து வளர்ந்த வடிவத்தை
உடைய   ஏழுமரங்களையும்;   தொளைத்தவன்-   ஊடுருவிச்
செல்லுமாறு     அம்புதைய்த்த   இராமபிரானுடைய;  மார்பில்
- மார்பிலே     (இன்று);     மன்மதன்     சரத்தொடும்-
மன்மதனுடைய   அம்புகளோடு;    நிலவின்தாரை     வாள்
பாய்ந்தது
-   நிலவின் கதிர்களாகிய வாளும் பாய்ந்தது.
 

சீதையைப்     பிரிந்து     பிரிவாற்றாமையால்   வருந்திய, 
இராமபிரானை  மன்மதனும் மலரம்புகளால் துன்புறச் செய்தான்.
பிரிந்தார்க்குப் பகையான  நிலவும்   துன்புறுத்தியது   என்பது 
கருத்து. 
 

(10)
 

இராமன் பிரிவுத் துயரால் வருந்துதல்
 

6526.

உடலினை நோக்கும்; இன் உயிரை நோக்குமால்;
இடரினை நோக்கும்; மற்று யாதும் நோக்கலன்;
கடலினை நோக்கும்; அக் கள்வன் வைகுறும்
திடரினை நோக்கும்; தன் சிலையை நோக்குமால்.