| கலங்களோடும், அச் சாத்திய துகிலொடும், கதிர் |
| வாள் |
| இலங்கை வேந்தனும், ஏழு நாள் விசும்பிடை |
| இருந்தான்! |
|
அலங்கல் மாலையும் சாந்தமும்- அணிந்த மாலையும்; பூசிய சந்தனமும்; அச் சாத்தியதுகிலொடும் - அணிந்திருந்த அந்த ஆடையோடும்; கதிர்வாள் இலங்கை வேந்தனும் - ஒளிரும் வாளை உடைய இலங்கை வேந்தனான இராவணனும்; ஏழுநாள் விசும்பிடை இருந்தான்- ஏழுநாட்கள் வானிலேயே தங்கியிருந்தான் என்றால்; விலங்கல் வெந்தவா- இலங்கைக்கு ஆதாரமாயிருந்த திரிகூடமலை அனுமன் வைத்த தீயால் வெந்ததை; வேறுஇனி விளம்புவது எவனோ- இனித்தனியாக விளம்பவும் கூடுமோ?. |
சிவபிரான் தந்தவாள் இருந்தும் இலங்கையைத் தீக்கு இரையாக்கிய அனுமனை இராவணனால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதை 'கதிர்வாள் இலங்கை வேந்தன்' என்பதுணர்த்தும். கலம் - அணிகலம். |
(66) |
6582. | 'நொதுமல் திண் திறல் அரக்கனது இலங்கையை |
| நுவன்றேன்; |
| அது மற்று அவ்வழி அரணமும் பெருமையும் |
| அறைந்தேன்: |
| இது மற்று அவ்வழி எய்தியது; இராவணன் ஏவ, |
| பதுமத்து அண்ணலே பண்டுபோல் அந் நகர் |
| படைத்தான். |
|
நொதுமல் திண் திறல் அரக்கனது- வலிய, திண்ணிய, ஆற்றலை உடைய அரக்கனான இராவணனது; இலங்கையை நுவன்றேன் - இலங்கையின் வரலாறு பற்றிக் கூறினேன்; அதுமற்றவ்வழி அரணமும் - அதுவல்லாது இலங்கையின் மதிலைப் பற்றியும்; பெருமையும் அறைந்தேன்- இராவணனது பெருமையும் சொன்னேன்; இது மற்றவ் வழி எய்தியது- இந்த அனுமனது செய்தி அங்குநடந்தது (அதனையும் சொன்னேன்); இராவணன் ஏவ - இராவணன் கட்டளை இட; பதுமத்து அண்ணலே - தாமரை மலரில் வசிக்கும் பிரமதேவனே; பண்டுபோல் அந்நகர் படைத்தான்- முன்பு போலத் திகழும்படி அந்த நகரத்தைப் படைத்தான். |