பக்கம் எண் :

 இலங்கை கேள்விப் படலம் 331

நொதுமல்  -  வலிமை. இராவணது  வலிமையும், திறமையும்
தோன்ற 'நொதுமல் திண்திறல் அரக்கன்' என்றான். இலங்கையின்
தோற்றம்,  அமைப்பு  போன்றவற்றைக்   கூறினேன்   என்பதை
'இலங்கையை நுவன்றேன்' என்றான் 'இது' என்பது இந்த அனுமன்
செயல்.  பதுமத்து   அண்ணல்  -   தாமரையில்  வீற்றிருக்கும்
தலைவன் (பிரமன்) 
 

(67)
 

வீடணன் தான் போந்த காரணம் கூறுதல்
 

6583.

'காந்தும் வாளியின் கரன் முதல் வீரரும், கவியின் 
வேந்தும், என்று இவர் விளிந்தவா கேட்டு அன்று;

அவ் இலங்கை

தீந்தவா கண்டும், அரக்கரைச் செருவிடை முருக்கிப்
போந்தவா கண்டும், நான் இங்குப் புகுந்தது-

புகழோய்!'

 

புகழோய்  -  புகழ்மிக்கவனே; நான்  இங்குப் புகுந்தது -
நான் உன்னைச் சரண்புகுந்து இங்கு வந்தது; காந்தும் வாளியின்-
உனது எரிக்கும்  அம்புகளால்; கரன்முதல்  வீரரும் - கரனும்
அவனுக்குத்  துணையாக  வந்த வீரர்களும்; கவியின் வேந்தும்-
வானர சேனையின் அரசனான  வாலியும்; என்றிவர் விளிந்தவா
கேட்டன்று
- ஆகிய இவர்களெல்லாம் மடிந்ததைக் கேட்டதனால்
அல்ல; அவ்விலங்கை   தீந்தவா கண்டும்- அந்த  இலங்கை
உன்னருள் பெற்ற   அனுமன்  ஒருவனாலே  அழிந்தது  கண்டும்;
அரக்கரைச்   செருவிடை  முருக்கிப் போந்தவா கண்டும்-
இலங்கை அரக்கர்களை  எல்லாம் போரிலே அனுமன் அழித்துத்
திரும்பி வந்ததை நேரில் கண்டதாலுமேயாம்.
 

இராமபிரான் தனது   பண்பாலும்   செயலாலும்   புகழுக்கு
உரியவனாகத் திகழ்வதால் 'புகழோய்' என வீடணன் அழைத்தான்.
காந்துதல் - எரித்தல் ஒளிர்தலுமாம்.
 

(68)
 

இராமன் அனுமனைப் புகழ்ந்துரைத்தல்
 

6584.

கேள் கொள் மேலையான் கிளத்திய பொருள் எலாம்

கேட்டான்,

வாள் கொள் நோக்கியை, பாக்கியம் பழுத்தன்ன 

மயிலை,