பக்கம் எண் :

 இலங்கை கேள்விப் படலம் 333

கிடைத்தும் மீட்டிலாதது - நேரில் பார்க்கக் கிடைத்தும் கூட
நீ  மீட்டு வராதது; என்  வில் தொழில் காட்டவோ - நான்
எனது வில்லாற்றலைக் காட்ட வேண்டும் என்பதற்காகவோ?
 

கூட்டினார் - திரட்டி வைத்தவர்கள். பாகம் - பாதி.  மேற்பட
- மேலாக. சீதையை நேரில் காணக் கிடைத்தும் பேராற்றல் உள்ள
நீ  மீட்டுவரக்கூடிய  வலிமை  இருந்தும்,  மீட்டு   வராதது என்
வில்தொழில்  காட்டவோ   என    இராமபிரான்   அனுமனைப்
புகழ்ந்தான். கிளி மொழி - உவமைத் தொகை.
 

(70)
 

6586.

'நின் செய் தோள் வலி நிரம்பிய இலங்கையை

நேர்ந்தோம்;

பின் செய்தோம் சில; அவை இனிப் பீடு ஒன்று 

பெறுமோ?-

பொன் செய் தோளினாய் !-போர்ப் பெரும்

படையொடும் புக்கோம்;

என் செய்தோம் என்று பெரும் புகழ் எய்துவான்

இருந்தோம்?

 

பொன் செய் தோளினாய் - பொன்னாலமைந்தது போன்ற
தோள்களை உடையவனே; நின் செய் தோள் வலி நிரம்பிய-
உனது  தோள்கள்  புரிந்த ஆற்றலே  எங்கும்   நிறைந்துள்ள;
இலங்கையை   நேர்ந்தோம்  -    இலங்கையை   நாங்கள்
அடைந்தோம்; பின் செய்தோம் சில - எங்கள் வலிமையைக்
காட்டி பின் சில போர்கள் செய்தோம்;  அவை  இனிப் பீடு
ஒன்று பெறுமோ
- அப்படி நாங்கள் செய்யும் போர் முதலிய
வீரச் செயல்கள் ஒரு பெருமை பெறுமோ?;  போர்ப் பெரும்
படையொடும்   புக்கோம் 
-  போர்த்  தொழில்   வல்ல
பெரும்படையுடன் நாங்கள் புகுந்துள்ளோம்; என் செய்தோம்
என்று
- என்ன பெரிய செயலைச் செய்து  விட்டோம் என்று;
பெரும்புகழ் எய்துவான் இருந்தோம்- பெரிய புகழ் அடைய
இருந்தோம்.
 

கிடைத்தற்கரியது    பொன்;  பெருமைக்குரிய   அனுமன்
தோள்களை 'பொன் செய்தோள்' என்றார். இலங்கையில் எல்லா
இடங்களிலும் அனுமானது தோளாற்றலைப் பற்றிய பேச்சாகவே
இருப்பதால்  'நின்   செய்தோள்   வலி   நிரம்பிய இலங்கை'
என்றார். உனக்குப்  பின்  சென்று நாங்கள்  என்ன  பெருமை
அடையப் போகிறோம் என்பதை 'இனிப் பீடு ஒன்று பெறுமோ'
என்றார்;   இனி   நாங்கள்  எதைச்   செய்து   புகழ்  எய்த
இருக்கிறோம் என அனுமனைப் புகழ்ந்தான் என்பது கருத்து.