பக்கம் எண் :

334யுத்த காண்டம் 

6587.

'என்னது ஆக்கிய வலியொடு அவ் இராவணன் 

வலியும்

உன்னது ஆக்கினை; பாக்கியம் உருக் கொண்டது

ஒப்பாய்!

முன்னது ஆக்கிய மூஉலகு ஆக்கிய முதலோன்
பின்னது ஆக்கிய பதம் நினக்கு ஆக்கினென்; 

பெற்றாய்.'

 

பாக்கியம் உருக்  கொண்டது ஒப்பாய் -  புண்ணியமே
வடிவு கொண்டது போன்றவனே; என்னது ஆக்கியவலியொடு
- எனக்கே உரியதான வலிமையோடு; அவ்விராவணன் வலியும்
- அந்த இராவணனது  வலிமையையும்; உன்னது ஆக்கினை -
உனக்கே  உரியது  ஆக்கிக்  கொண்டாய்; முன்னது ஆக்கிய
மூவுலகு
-  முன்னால்  படைக்கப்பட்ட   மூன்றுலகங்களையும்;
ஆக்கிய  முதலோன் - படைத்த பிரமதேவனுக்காக; பின்னது
ஆக்கிய  பெரும் பதம்
- ஏற்பட்ட பதவியாகிய பிரமபதத்தை;
நின்னது ஆக்கினென் பெற்றாய் - உனக்கு உரியதாக்கினேன்;
பெற்று உயர்வாயாக.
 

கரன்,    திரிசிரா    போன்றவர்களை     வெற்றிகொண்ட
இராமபிரானது  வலிமையை   'என்ன  தாக்கிய  வலி'  என்றார்.
கைலையை  எடுத்தது,  திக்கு  யானைகளை வென்றது  போன்ற
இராவணனது பலத்தை 'அவ்  விராவணன் வலிமையும்' என்றார்.
இலங்கையைத்   தீக்கிரையாக்கியது  மற்றும்  போர்  வென்றது
போன்ற அனுமனது  வலிமையை  'உன்னதாக்கினை'   என்றார்.
மூவுலகங்களையும்  படைத்த  முதல்வன் பிரமன். அவனுக்குரிய
பதவி பிரமபதம்; அதனை  உனக்குத் தந்தேன் பெறுவது உறுதி
என்பதால் 'பெற்றாய்' என இறந்த காலத்தால் கூறினார்.
 

(72)
 

6588.

என்று கூறலும், எழுந்து, இரு நிலன் உற இறைஞ்சி,
ஒன்றும் பேசலன் நாணினன், வணங்கிய உரவோன்;
நின்ற வானரத் தலைவரும் அரசும், அந் நெடியோன்
வென்றி கேட்டலும், வீடு பெற்றார் என வியந்தார்.
  

என்று கூறலும் - என்று இராமபிரான் கூறியதும்; எழுந்து,
நிலன்உற இறைஞ்சி- அனுமன், எழுந்து, நிலத்தோடு படும் படி
கீழே வீழ்ந்து இராமனை வணங்கி; ஒன்றும் பேசலன்-ஒன்றுமே
பேசாதவனாக;  நாணினன் வணங்கிய  உரவோன் - தன்னை
இராமன் புகழ்வதற்கு நாணப்பட்டவனாய் வலிமைமிக்கவனான