6. வருணனை வழி வேண்டு படலம் |
இராமபிரான் கடலைக் கடந்து இலங்கை செல்வதற்குரிய வழிபற்றி - வீடணனுடன் சிந்திக்கலானான். கடலரசனான வருணனை வழி வேண்டினால் தருவான் என வீடணன் கூறியபடி, வருண மந்திரம் ஜெபித்திருந்ததும், அதற்கு வருணன் வாராமையால் இராமபிரான் சினம் கொண்டு கடலின் மேல் அம்பு விடுதலும், அதனால் கடல் பட்டபாடும் இராமபிரான் பிரம்மாத்திரம் ஏவ, அதனால் நிகழ்ந்த மாறுபாடுகளும் வருணன் தோன்றிப் பணிவுரை பகர்தலும் இராமபிரானை வருணன் அடைக்கலம் வேண்டுதலும் இராமபிரான் சினம் தணிந்து காலந்தாழ்த்தமைக்குக் காரணம் கேட்டறிதலும் அம்புக்கு இலக்கு யாதெனக் கேட்க வருணன் கூறுதலும் இராமன் அம்பு அவுணர்களை அழித்தலும் இராமபிரான் வழி வேண்ட, வருணன் சேதுகட்டச் சொல்லுதலும் இராமபிரான் சேது கட்டப் பணித்தலும் இப்படலத்துள் கூறப்படும் செய்திகளாகும். |
கடல் கடக்க இராமன் வழி கேட்டல் |
6589. | 'தொடக்கும் என்னில் இவ் உலகு ஒரு மூன்றையும் |
| தோளால் |
| அடக்கும் வண்ணமும், அழித்தலும், ஒரு பொருள் |
| அன்றால்; |
| கிடக்கும் வண்ண வெங் கடலினைக் கிளர் |
| பெருஞ் சேனை |
| கடக்கும் வண்ணமும் எண்ணுதி-எண்ணு நூல் |
| கற்றாய்!' |
|
எண்ணுநூல்கற்றாய் - மதிக்கத்தக்க நல்ல நூல்களைக் கற்றுணர்ந்தவனே! தொடக்கும் என்னில்- இந்தக் கடல் நமது கட்டுக்கு உட்படுமானால்; இவ்வுலகு ஒரு மூன்றையும்- இந்த மூன்று உலகங்களையும்; தோளால் அடக்கும் வண்ணமும்- நமது தோள்களாலே அடக்கும் வண்ணமும்; அழித்தலும் ஒரு பொருள் அன்றால் - அழிப்பதும் ஒரு பொருட்டல்ல; கிடக்கும் வண்ண வெங்கடலினை - எதிரே பரந்து கிடக்கின்ற நீலநிறமுள்ள இந்தக் |