பக்கம் எண் :

338யுத்த காண்டம் 

குலமுதல்தலைவர். சகரர். சகரர்கள் தோண்டியதால் 'சாகரம்'
எனப்   பெயர்   பெற்றது   என்பர்.  கடல்    தெய்வத்தைப்
பிரார்த்திப்பதற்குத்  தனியே இருந்து  வேண்டவேண்டுமாதலின்
'வேறு இரந்து வேண்டுதி' என்றான்.
  

(2)
 

இராமன் கடற்கரையை அடைதல்
 

6591.

'நன்று, இலங்கையர் நாயகன் மொழி' என

நயந்தான்,

ஒன்று தன் பெருந் துணைவரும் புடை செல,

உரவோன்,

சென்று வேலையைச் சேர்தலும், விசும்பிடை, சிவந்த

குன்றின் மேல்நின்று குதித்தன, பகலவன் குதிரை.
 

நன்று   இலங்கையர்  நாயகன்  மொழி - இலங்கையர்
வேந்தனான வீடணன் கூறிய மொழி நல்லதே; என நயந்தான்-
என்று  விரும்பி  உடன்பட்ட இராமபிரான்; ஒன்றுதன் பெரும்
துணைவரும்
-  நெருங்கியதனது    சிறந்த   துணைவர்களும்;
புடைசெல  -  இருபக்கமும் நெருங்கிவர; உரவோன் சென்று
வேலையைச் சேர்தலும்
- வலிமை மிக்கவனாகிய இராமபிரான்
கடற்கரையை  அடைதலும்; சிவந்த குன்றின் மேல்நின்று -
சிவந்த  நிறம்  வாய்ந்த உதயகிரியின்  மேலிருந்து;  பகலவன்
குதிரை
-  சூரியனுடைய  தேரிலே  பூட்டப்பட்ட  குதிரைகள்;
விசும்பிடைக்    குதித்தன   -   வானத்திலே    குதித்துச்
செல்வனவாயின.
  

'உரவோன்; அறிவுத்திண்மையுடையவன் - என இராமனைக்
குறிப்பிட்டார். சூரியோதயத்தாலே  கீழ்த்திசையிலுள்ள உதயகிரி
சிவந்திருந்ததாதலின் 'சிவந்த குன்றின் மேல்' என்றார்.
 

(3)
 

இராமன் புல்லில் அமர்ந்து, வருண மந்திரத்தைத் தியானித்தல்
  

6592.

கொழுங் கதிர்ப் பகைக் கோள் இருள் நீங்கிய

கொள்கை,

செழுஞ் சுடர்ப் பனிக் கலை எலாம் நிரம்பிய திங்கள்

புழுங்கு வெஞ் சினத்து அஞ்சனப் பொறி வரி

அரவம்

விழுங்கி நீங்கியது ஒத்தது, வேலை சூழ் ஞாலம்.