பக்கம் எண் :

340யுத்த காண்டம் 

'கருங்கடல்   நோக்கிக்   கருணையங்கடல்  கிடந்தான்'  என்ற
சொல்லமைப்பின் நயம் தேர்க.
 

(5)
 

ஏழுநாள் சென்றும் வருணன் வாராமையால் இராமன் சினத்தல்
 

6594.

பூழி சென்று தன் திரு உருப் பொருந்தவும், பொறை

தீர்

வாழி வெங் கதிர் மணி முகம் வருடவும்,

வளர்ந்தான்;

ஊழி சென்றன ஒப்பன, ஒரு பகல்; அவை ஓர்

ஏழு சென்றன; வந்திலன், எறி கடற்கு இறைவன்.
 

பூழி சென்று தன் திருவுருப் பொருந்தவும்- கடற்கரைப்
புழுதியெல்லாம் இராமபிரானுடைய  திருமேனியில் பொருந்தவும்;
பொறை தீர் வாழி  வெங்கதிர்   மணிமுகம்  வருடவும்-
குற்றம்   நீங்கிய  வெம்மை  வாய்ந்த சூரியனுடைய கிரணங்கள்
அழகிய   முகத்தைத்  தடவவும்; வளர்ந்தான்  - இராமபிரான்
தருப்பையின் மீது கண்களை மூடியவனாகப் படுத்திருந்தான்; ஒரு
பகல் ஊழி சென்றன ஒப்பன- ஒருநாள் கழிவது பல ஊழிகள்
செல்வன போன்றிருந்தது சென்றும்; அவை ஓர் ஏழு சென்றன-
அத்தகை  நாட்கள்  ஏழு  சென்றன;  எறிகடற்கு  இறைவன்
வந்திலன் 
-  அலையெறியும்   கடல்  அரசனான  வருணன்
வந்தானல்லன்.
 

வருடுதல்- தடவுதல். ஒரு பகல் கழிவது ஒரு ஊழிக்காலம்
கழிவது போலிருந்தது "ஒரு பகல்  பற்பல ஊழிகளாய்  விடும்'
என்ற திருவிருத்தம் நினைவு கூறத்தக்கது. இப்படிப்பட்ட ஏழு
நாள்கள் சென்றும் வருணன் வந்திலன்.
 

(6)
 

6595.

'ஊற்றம் மீக் கொண்ட வேலையான், "உண்டு",

"இலை", என்னும்

மாற்றம் ஈக்கவும் பெற்றிலம், யாம்' எனும் மனத்தால்,

ஏற்றம் மீக்கொண்ட புனலிடை எரி முளைத்தென்னச்

 

சீற்றம் மீக்கொண்டு சிவந்தன, தாமரைச் செங் கண்.
 

ஊற்றம்   மீக்   கொண்ட  வேலையான்  - செருக்கு
மேலோங்கப்  பெற்ற இந்தக்  கடல் வேந்தன்; உண்டு,  இலை
என்னும் மாற்றம் ஈக்கவும் பெற்றிலம் யாம்
-உண்டு, இல்லை
என்று  சொல்லக்   கேட்கவும்   பெற்றோமில்லையாம்;  எனும்
மனத்தால் 
-  என்ற  எண்ணத்தால்; ஏற்றம்  மீக் கொண்ட
புனலிடை
- பெருகிப் பொங்கி