பக்கம் எண் :

 வருணனை வழி வேண்டு படலம் 341

வரும்   தண்ணீரிலே;   எரி   முளைத்தென்ன  - நெருப்புத்
தோன்றியது போல; சீற்றம் மீக் கொண்டு- சினம் மேலோங்க;
தாமரைச் செங்கண் சிவந்தன-  இராமபிரானுடைய  தாமரை
மலர் போன்ற செம்மையான கண்கள் கோபத்தால் சிவந்தன.
 

வேலையான் -  கடல்   வேந்தன்.   கருணைக்  கடலான
இராமபிரானுக்குக்  கோபம் இயற்கையல்ல என்பதால் பொங்கி
எழும்  புனலிடையே  நெருப்பு  முளைத்தது  போல், கருணை
நிறைந்த உள்ளத்திலே  சினம்  கொண்டான் என்றார்.  நீரிலே
நெருப்பு முளைக்காது எனவே இது இல்பொருளுவமையாம்.
 

(7)
 

6596.

'மாண்ட இல் இழந்து அயரும் நான், வழி, தனை

வணங்கி,

வேண்ட, "இல்லை" என்று ஒளித்ததாம்' என, மனம்

வெதும்பி,

நீண்ட வில்லுடை நெடுங் கனல் உயிர்ப்பொடும்

நெடு நாண்

பூண்ட வில் எனக் குனிந்தன, கொழுங் கடைப்

புருவம்.

 

மாண்ட இல்  இழந்து  அயரும்   நான்-  மாண்புமிக்க
இல்லாளாகிய   சீதாபிராட்டியை   இழந்து   வருந்தும்    நான்;
வழிதனை வணங்கி வேண்ட- அந்த பிராட்டியை மீட்டு வரச்
செல்லவழியை வணங்கி வருணனை வேண்டவும்; இல்லை என்று
ஒளித்ததாம்  என
- வழிவிடுதற்கில்லை  என்பதால்  வருணன்
வராது ஒளிந்தனனோ என்று; மனம்  வெதும்பி - இராமபிரான்
மனம்   வெதும்பினானாக; நீண்ட  வில்லுடை   நெடுங்கனல்
உயிர்ப்பொடும்
- நீண்ட ஒளியை உடைய நெருப்பைப்  போன்ற
பெருமூச்சுடனும்; நெடு நாண் பூண்டவில் என- நீண்ட நாண்
பூட்டிய  வில்லைப்   போலவும்;   கொழுங்கடைப்   புருவம்
குனிந்தன
- செழுமையான புருவங்கள் வளைந்தன.
 

சினத்தாலும் புருவங்கள் வளைதலுண்டு   என்பதால் 'புருவம்
குனிந்தன'   என்றார்.  'மாண்டஇல்'  என்பதற்கு   மாண்புடைய
மனைவி என்பது பொருள் 'மாண்ட என் மனைவியொடு மக்களும்
நிரம்பினர்'  என்ற   புறப்பாடலில்  (புறம் - 191)   இப்பொருளில்
வந்தது நினைதற்குரியதாம். இல்லை  என்று சொல்லும்  குறிப்புத்
தோன்ற  ஒளிந்து  கொண்டான் என்னும்  பொருள்பட  'இல்லை
என்று ஒளித்ததாம்'