பக்கம் எண் :

342யுத்த காண்டம் 

என்றார். புருவம் வளைந்தது வில் வளைவதை நினைவு படுத்தும்.
நீண்டவில்-நெடிய ஒளி. நாண் பூண்ட வில் - நாண் பூட்டியவில்.
 

(8)
 

6597.

'ஒன்றும் வேண்டலர்ஆயினும், ஒருவர்பால் ஒருவர்

சென்று வேண்டுவரேல், அவர் சிறுமையின் தீரார்;

இன்று வேண்டியது எறி கடல் நெறிதனை மறுத்தான்;

நன்று, நன்று !' என, நகையொடும் புகை உக,

நக்கான்.

 

ஒன்றும்   வேண்டலர்  ஆயினும்- ஒருவர், எவரிடமும்
எதையும்  வேண்டாதவர் என்றாலும்; ஒருவர்  பால்  ஒருவர்
சென்று 
வேண்டுவரேல் - ஒருவரிடம்  ஒருவர்சென்று   ஒரு
பொருளை  வேண்டுவாராயின்; அவர்  சிறுமையின்  தீரார்-
அவ்வாறு  வேண்டியவர்   சிறுமையிலிருந்து  நீங்க  மாட்டார்;
இன்று வேண்டியது- இன்று நான் வருணனை வேண்டியதாகிய;
நெறிதனை எறிகடல் மறுத்தான்- இலங்கைக்குச்  செல்லும்
வழியைத் தர அலைபொங்கும் கடல் வேந்தன் மறுத்துவிட்டான்;
நன்று நன்று என- நல்லது நல்லது என்று; நகையொடு புகை
உக
-  சிரிப்போடு, கோபத்தால்  புகையும்  தோன்ற; நக்கான்-
இராமபிரான் கோபச்சிரிப்புச் சிரித்தான்.
 

பொதுப்   பொருளைக்   கூறிச்    சிறப்புப்   பொருளை
விளக்குவதால் இது வேற்றுப் பொருள் வைப்பணியாகும். 
 

(9)
 

6598.

' "பாரம் நீங்கிய சிலையினன், இராவணன் பறிப்பத்

தாரம் நீங்கிய தன்மையன், ஆதலின், தகைசால்

வீரம் நீங்கிய மனிதன்" என்று இகழ்ச்சி மேல்

விளைய,

ஈரம் நீங்கியது, எறி கடல் ஆம்' என இசைத்தான்.
 

பாரம்   நீங்கிய    சிலையினன்-    பெருமையில்லாத
வில்லையுடையவன்;   இராவணன்   பறிப்பத்தாரம்  நீங்கிய
தன்மையன்
- இராவணன் கவர்ந்து கொண்டமையால் மனைவியை
நீங்கிய    தன்மையினன்;  ஆதலின்,  தகை   சால்   வீரம்
நீங்கியமனிதன் 
-   ஆதலால்,   தகுதி   நிறைந்ததான வீரம்
நீங்கிய  மானிடன்;   என்று   இகழ்ச்சி  மேல்  விளைய -
எனக்கருதி,    மேலும்     இகழ்ச்சி   தோன்ற;    எறிகடல்-
அலையெறியும் கடலுக்கு அரசனான வருணன்; ஈரம்