கொண்டிருந்த அரக்கர்கள் இராமனது அம்பால் அழிவர் என்பதால் "உலகத்து நலிவு தீர" என்றான். |
(77) |
6666. | 'மன்னவ! மருகாந்தாரம் என்பது ஓர் தீவின் |
| வாழ்வார், |
| அன்னவர் சதகோடிக்கும் மேல் உளார், அவுணர் |
| ஆயோர், |
| தின்னவே உலகம் எல்லாம் தீந்தன; எனக்கும் தீயார்; |
| மின் உமிழ் கணையை வெய்யோர்மேல் செல விடுதி' |
| என்றான். |
|
மன்னவ- உலகனைத்துக்கும் மன்னனாக விளங்குபவனே; மருகாந்தாரம் என்பதோர் தீவில் வாழ்வார்- மருகாந்தாரம் என்ற பெயர் கொண்ட கடல் நடுவே உள்ள தீவில் வாழ்பவர்கள்; அன்னவர் சத கோடிக்கு மேல் உளர்- அத்தகையோர் நூறு கோடிக்கு மேற்பட்ட எண்ணிக்கையினராக உள்ளனர்; அவுணர் ஆயோர் தின்னவே உலகமெல்லாம் தீந்தன- அரக்கர்களான அவர்கள் தின்பதால் உலகமெல்லாம் அழிந்து போயிற்று; எனக்கும் தீயார் - அவ்வரக்கர்கள் எனக்கும் தீங்கு செய்யும் தீயவர்கள்; மீன் உமிழ் கணையை- மின்னலைப் போல ஒளியை உமிழும் இந்த அம்பை; வெய்யோர் மேற்செல விடுதி என்றான்- அந்தக் கொடியவர்கள் மேல் செல்லுமாறு விடுவாயாக என்றான். |
'உலகம்' இடவாகு பெயராக உலக மக்களை உணர்த்தியது. அரக்கர் தின்பதற்கு உரியது அவ்வுயிர்களின் உடல்களேயாம். தீயும் என்பது உறுதியாதலால் 'தீந்தது' என்று கூறினான் என்க; (கால, வழுவமைதி) தன்னை அடைக்கலமடைந்த வருணனுக்குத் தீயோர்தனக்கும் தீயோர் என்பது இராமனது கொள்கையாதலின் 'எனக்கும் தீயோர்' என்றான். அவுணர் - அசுரர். சதம் - நூறு. |
(78) |
6667. | நேடி, நூல் தெரிந்துளோர்தம் உணர்விற்கும், நிமிர |
| நின்றான், |
| 'கோடி நூறு ஆய தீய அவுணரைக் குலங்களோடும் |
| ஓடி நூறு' என்று விட்டான்; ஓர் இமை ஒடுங்கா |
| முன்னம், |
| பாடி நூறாக நூறி மீண்டது, அப் பகழித் தெய்வம். |