நேடி நூல் தெரிந்துளோர் தம்- நல்ல ஞான நூல்களைத் தேடி, ஆராய்ந்து கற்றுத் தெளிந்த அறிவுடைய ஞானிகளது; உணர்விற்கும் நிமிர நின்றான்- ஞான உணர்வுக்கும் எட்டாது உயர்ந்து விளங்குபவனான இராமபிரான்; கோடி நூறு ஆயதீய அவுணரை- (தனது அம்பினை நோக்கி) நூறு கோடியினரான கொடிய அரக்கர்களை; குலங்களோடும் ஓடி நூறு என்று விட்டான்- அவர்களது குலங்களோடும் ஓடிச் சென்று அழிப்பாயாக என்று கூறி எய்தான்; ஓர் இமை ஒடுங்கா முன்னம்- ஒரு இமைப்பொழுது ஆவதற்கு முன்பே; அப் பகழித் தெய்வம்- அந்த அம்பாகிய தெய்வம்; பாடி நூறாக நூறி மீண்டது- அவ்வரக்கரூர் தூளாகும்படி அழித்துவிட்டு மீண்டு வந்தது. |
நேடுதல் - ஆராய்தல். நூல் - ஞான நூல். நிமிர - உயர்ந்து, ஞானிகளின் உணர்வுக்கு எட்டாதவன் "எங்கள் நான் மறைக்கும் தேவர் அறிவுக்கும் பிறர்க்கும் எட்டாச் செங்கண் மால்" (417) என்று முன்பும் கூறுவது கருதத்தக்கது. உணர்ந்துணர்ந்துணரிலும் இறைநிலை உணர்வரிது' (1.3.6) என்ற திருவாய்மொழியும் நினைவு கூரலாம். "கற்றவர் கற்றவர் உணர்வு காண்கிலாக் கொற்றவன்' (56) எனவும் கம்பரே முன்னரும் கூறியுள்ளார். நூறு - அழித்திடு. இமை ஒடுங்கா முன்னம் - கண்ணை இமைத்து முடிப்பதற்குள். பிரமாத்திரம் ஆதலாலும் தீயோரை நூறிட எடுத்த அவதாரப் பெருமானுக்கு உரியது ஆதலாலும் அம்பினைப் பகழித் தெய்வம் என்றார். பாடி - ஊர்; இங்கு மருகாந்தாரம். |
(79) |
6668. | ஆய்வினை உடையர் ஆகி, அறம் பிழையாதார்க்கு |
| எல்லாம் |
| ஏய்வன நலனே அன்றி, இறுதி வந்து அடைவது |
| உண்டோ? |
| மாய் வினை இயற்றி, முற்றும் வருணன்மேல் வந்த |
| சீற்றம், |
| தீவினை உடையார்மாட்டே தீங்கினைச் செய்தது |
| அன்றே. |
|
ஆய்வினை உடையராகி- ஆராய்ந்து புரியும் நல்ல செயல்களையே உடையவராகி; அறம்பிழையாதார்க்கு எல்லாம்- அறநெறியிலிருந்து தவறாது வாழும் நல்லவர்களுக்கு எல்லாம்; ஏய்வன நலனே அன்றி- எவ்விதத்தும் நன்மையே எய்துமே யல்லாது; இறுதி வந்தடைவதுண்டோ- அழிவு வந்து |