பக்கம் எண் :

 வருணனை வழி வேண்டு படலம் 389

இராமன் வழி வேண்ட வருணன் சேதுகட்டச் சொல்லுதல்
 

6670.

'மொழி உனக்கு அபயம் என்றாய்; ஆதலான், முனிவு

தீர்ந்தேன்;

பழி எனக்கு ஆகும் என்று, பாதகர் பரவை என்னும்

குழியினைக் கருதிச் செய்த குமண்டையைக் குறித்து

நீங்க,

வழியினைத் தருதி' என்றான், வருணனை நோக்கி,

வள்ளல்.

 

வள்ளல்    வருணனை    நோக்கி   -   வேண்டுவார்
வேண்டியதருளும்   வள்ளலாகிய   இராமபிரான்   வருணனைப்
பார்த்து;  மொழி   உனக்கு  அபயம்   என்றாய்-  'உனக்கு
அடைக்கலம்'  என்று  ஒரு   சொல்  நீ சொன்னாய்; ஆதலால்
முனிவு தீர்ந்தேன்
- அதனாலே உன்  மீது கொண்டிருந்த சினம்
தீர்ந்தேன்; பழி  எனக்கு   ஆகும்  என்று- இராமன் தனது
மனைவியைக் கூடக் காப்பாற்றும்  வலிமை இல்லாதவன்  என்று
உலக மக்கள் கூறும் பழிக்கு நான் ஆளாகட்டும் என்று; பாதகர்
பரவை   என்னும்   குழியினைக்  கருதி
- பாதகர்களாகிய
அரக்கர்கள்   இலங்கைக்கு  அரணாகக்  கடல்   என்ற   குழி
இருப்பதைக்    கருதி;   செய்த   குமண்டையைக்  குறித்து-
செய்த   கூத்தினைக்  குறித்து;   நீங்க   வழியினைத்  தருதி
என்றான்
-   அது  நீங்க, இலங்கை  செல்லுதற்குரிய  வழியைத்
தருவாயாக என்றான்.
 

பாதகர் - இராவணன் முதலானோர் பாதகர் 'பரவை (கடல்)
நமக்குப் பாதுகாப்பான 'நீரரண்'  என்று   நினைக்கலாம்; அது
நமக்குத்   தாண்ட   முடிந்த  ஒரு சிறிய  'குழி'தான்  என்பது
இராமபிரான்  கருத்து.  குமண்டை  -  மகிழ்ச்சிச்  செருக்கால்
செய்யும் ஒருவகைக் கூத்து.
 

(82)
 

6671.

'ஆழமும் அகலம்தானும் அளப்ப அரிது எனக்கும்,

ஐய!

ஏழ் என அடுக்கி நின்ற உலகுக்கும் எல்லை

இல்லை;

வாழியாய்! வற்றி நீங்கில், வரம்பு அறு காலம்

எல்லாம்

தாழும்; நின் சேனை உள்ளம் தளர்வுறும்-தவத்தின்

மிக்காய்!