பக்கம் எண் :

390யுத்த காண்டம் 

தவத்தின்   மிக்காய் -   மிகுந்த   தவம்    பொருந்திய
பெருமானே; ஆழமும் அகலம் தானும் அளப்பரிது எனக்கும்
ஐய
- ஐயனே!  இந்தக்  கடலின்   ஆழத்தையும்  அகலத்தையும்
அளந்தறிவதென்பது  கடல்   வேந்தனான   எனக்கும்   அரிய
தொன்றாகும்; ஏழ் என அடுக்கி நின்ற  உலகுக்கும் எல்லை
இல்லை
- 'ஏழுலகங்கள்'  என  அடுக்காக  உள்ள  உலகுக்கும்
கடலில்லையேல்  எல்லையில்லை; வாழியாய்  வற்றி  நீங்கில்
- வாழ்வுக்குரிய  இறைவனே,  இந்தக்  கடலை வற்றச்  செய்து,
நீர் முழுவதையும் நீங்கச் செய்ய;  வரம்பறு கால  மெல்லாம்
தாழும்
-  அளவில்லாத   காலம் தாமதமாகும்; நின்   சேனை
உள்ளம்    தளர்வுறும்
-   உனது  வானர  சேனை,   காலம்
நீட்டிப்பதால் மனம்தளர்ந்து போகநேரிடும் (என்றான்).
 

'வழியினைத் தருதி' என்று கேட்ட  ராமபிரானுக்கு வருணன்
கூறிய   மறுமொழி   இது.   இந்தக்   கடலின்   ஆழத்தையும்
அகலத்தையும்  அளந்தறியக்  கடல் தெய்வமாகிய  என்னாலும்
இயலாது  என்பான்  'எனக்கும்  அளப்பரிது'  என்றான்.  கடல்
நீர்  வற்றி  நீங்குமானால் உலகுக்கு எல்லை  இல்லாது போகும்
என்பான் 'வற்றி  நீங்கில் 'உலகுக்கு எல்லை  இல்லை' என்றான்.
நீர்வற்றி   நீங்கினால்   உலகுக்கு  எல்லை  இல்லாது போகும்
என்பதைத்  தவிர, அப்படி  வற்றச்  செய்ய  அளவற்ற  காலம்
கடந்து  போகும்  என்பான்  'வரம்பறு  காலமெல்லாம்  தாழும்"
என்றான். அதனால் நின் வானர சேனை உள்ளம் சோர்ந்து போய்
விடும் என்பான் 'நின் சேனை  உள்ளம்  தளர்வுறும்"  என்றான்.
கடலில் வழி உண்டாக்க, கடல் நீரை வற்றச் செய்வது ஒரு வழி.
அதனை இராமபிரான்  எண்ணியிருக்கக்  கூடும்  என்று  கருதி,
அவ்வாறு    செய்தால்    நேரும்   விளைவுகளை   வருணன்
விவரிப்பானாயினான்.   உலகுக்கு   எல்லையில்லாது   போகும்
கடல்நீரை  வற்றச் செய்யக்  காலம் தாழ்க்கும்  என்று கூறி இது
ஏற்புடைய தல்ல என விலக்கி, வேறு வழி கூறலானான் என்க.
 

(83)
 

6672.

'கல்லென வலித்து நிற்பின், கணக்கு இலா உயிர்கள்

எல்லாம்

ஒல்லையின் உலந்து வீயும்; இட்டது ஒன்று

ஒழுகாவண்ணம்

எல்லை இல் காலம் எல்லாம் ஏந்துவென், இனிதின்;

எந்தாய்!

செல்லுதி, "சேது" என்று ஒன்று இயற்றி, என் 

சிரத்தின் மேலாய்.'