எந்தாய்- என் தந்தையே; கல் என வலித்து நிற்பின்- கடல் நீரைக் கல்லைப் போலக் கடினமாக்கி நின்றால்; கணக்கிலா உயிர்கள் எல்லாம் ஒல்லையில் உலந்து வீயும்- கடலில் வாழும் கணக்கில்லாத உயிரினங்களெல்லாம் வாழ முடியாதபடி விரைவில் இறந்து படும்; இட்டது ஒன்று ஒழுகா வண்ணம்- என்னிடம் இட்டது எதுவும் கீழே ஒழுகிவிடாதபடி; எல்லையில் காலமெல்லாம் ஏந்துவன்- அளவில்லாத காலமெல்லாம் தாங்கி ஏந்திக் கொண்டிருப்பேன் என் சிரத்தின் மேலாய்- எனது தலையின் மீதாக; சேது என்று ஒன்று இயற்றி- அணை என்ற ஒன்றை இயற்றி; இனிதின் செல்லுதி- அதன் வழியாக இனிதே செல்லுவாயாக (என்றான்) |
(84) |
இராமபிரான் சேதுகட்டப் பணித்தல் |
6673. | 'நன்று, இது புரிதும் அன்றே; நளிர் கடல் பெருமை |
| நம்மால் |
| இன்று இது தீரும் என்னில், எளிவரும் பூதம் |
| எல்லாம்; |
| குன்று கொண்டு அடுக்கி, சேது குயிற்றுதிர்' என்று |
| கூறிச் |
| சென்றனன், இருக்கை நோக்கி; வருணனும் |
| அருளின் சென்றான். |
|
நன்று இது புரிதும்- நல்லது இதைச் செய்வோம் என்று கூறிய இராமபிரான்; நம்மால் நளிர்கடல் பெருமை- கடல்மீது அணைகட்டுவோமானால், நம்மால் இந்தக் குளிர்ந்த கடலுக்குள்ள பெருமை; இன்று இது தீரும் என்னில்- நாம் அணைகட்டிக் கடந்து செல்வதால் தீருமாயின்; பூதமெல்லாம் எளிவரும்- மற்ற நான்கு பூதங்களும் நமக்கு எளிமைப்படும்; குன்று கொண்டு அடுக்கிச் சேது குயிற்றுதிர்- குன்றுகளைக் கொண்டு வந்து அடுக்கிக் கடலின்மீது அணைகட்டுங்கள்; என்று கூறிச் சென்றனன் இருக்கை- என்று வானர வீரர்களுக்குப் பணித்து விட்டுத் தனது இருப்பிடம் செல்லலானான்; வருணனும் அருனின் சென்றான்- வருணனும் இராமபிரானது அருளுக்கு உரியவனாகி (விடைபெற்றுச்) சென்றான். |