பக்கம் எண் :

392யுத்த காண்டம் 

நளிர்கடல் - குளிர்ந்த கடல். கடலுக்குரிய பெருமை 'ஆழமும்
அகலம்  தானும் அளப்  பரிது' நாம் 'அணை கட்டுவதால் அந்தப்
பெருமை நீங்கும் என்பான்  'இன்று இது தீரும்' என்றான். தீரவே
மற்றைய பூதங்களான  நிலம், தீ,  காற்று,  விசும்பு  ஆகியவையும்
பெருமை குறைந்து நமக்கு  எளிமைப்படும் என்பான்'  எளி வரும்
பூத மெல்லாம்' என்றான். கடல் நீரை வற்றச் செய்வதோ, கல்லைப்
போல்  இறுகும்படி  செய்வதோ  தவிர்ந்து மலைகளைக் கொண்டு
வந்து  அடுக்கி  அணை  கட்டுங்கள் என்பான் 'குன்று  கொண்டு
அடுக்கிச்  சேது  குயிற்றுதிர்' என்றான்.  குயிற்றுதல்  -  கட்டுதல்.
'அன்றோ' அசை.
 

(85)