பக்கம் எண் :

 சேது பந்தனப் படலம் 397

பேர்த்தன  மலை சில-  சில  வானரங்கள்  மலைகளைப்
பேர்த்தன;   பேர்க்கப்  பேர்க்க  நின்று  ஈர்த்தன   சில-
சிலவானரங்கள்    பேர்க்கப்    பேர்க்க    அம்   மலைகளை
இழுக்கலாயின; சில  சென்னி   ஏந்தின-  சில  வானரங்கள்
மலைகளைத்  தலைகளில்  தாங்கின;  தூர்த்தன   சில-   சில
வானரங்கள்  மலைகளைக்  கொண்டு  கடலைத்  தூர்த்தன; சில
தூர்க்கத்  தூர்க்க   நின்று   ஆர்த்தன
- சில   வானரங்கள்
மலைகளைக்  கடலில்  தூர்க்கத்  தூர்க்க  ஆரவாரம்  செய்தன;
சில சில ஆடிப் பாடின- சில குரங்குகள் மகிழ்ச்சியால் ஆடின
சில குரங்குகள் இராமனது புகழைப் பாடின. (6)
 

6680.

காலிடை ஒரு மலை உருட்டி, கைகளின்
மேலிடை மலையினை வாங்கி, விண் தொடும்
சூலுடை மழை முகில் சூழ்ந்து சுற்றிய,
வாலிடை, ஒரு மலை ஈர்த்து, வந்தவால்.
 

காலிடை ஒரு மலை உருட்டி- சில வானரங்கள் கால்களால்
ஒரு  மலையை   உருட்டிக்   கொண்டும்; கைகளின் மேலிடை
மலையினை   வாங்கி
- தங்களது   கைகளின்  இடையிலே ஒரு
மலையைத் தாங்கியும்; விண்  தொடும்- வானத்தைத்   தொட்டுக்
கொண்டிருப்பதும்;  சூலுடை  மழை  முகில் சூழ்ந்து  சுற்றிய-
கருக் கொண்ட மேகங்கள்  சூழ்ந்து சுற்றிக்  கொண்டிருப்பதுமான;
ஒரு  மலை  வாலிடை  ஈர்த்து- ஒரு பெரிய மலையை வாலால்
கட்டி இழுத்துக் கொண்டும்; வந்த- வந்தன.
 

ஆல் - அசை. வலிமை மிக்க வானரங்களாதலால், காலால் ஒரு
மலையை உருட்டிக் கொண்டும் கைகளால் ஒரு  மலையைச் சுமந்து
கொண்டும், வாலால் ஒரு  மலையைக் கட்டி  இழுத்துக் கொண்டும்
வந்தன. மலையின் உயரச்  சிறப்புத்தோன்ற 'சூலுடை மழை  முகில்
சூழ்ந்து சுற்றிய   மலை'   என்றார். ஒவ்வொரு   குரங்கும்   ஒரே
சமயத்தில்   மூன்று    மலைகளைக்   கொண்டு    வந்ததென்பது
கூறப்பட்டது.
 

(7)
 

நளன் மலைகளை அடுக்குதல்
 

6681.

முடுக்கினன், 'தருக' என, மூன்று கோடியர்

எடுக்கினும், அம் மலை ஒரு கை ஏந்தியிட்டு,

அடுக்கினன்; தன் வலி காட்டி, ஆழியை

நடுக்கினன்-நளன் எனும் நவையின் நீங்கினான்.