'சடையன் வெண்ணையில் தஞ்சம் என்றோர்களைத் தாங்கும் தன்மை போல் நளன் விஞ்சையில் தாங்கினன்' என இயையும். மஞ்சு - மேகம் மேகமண்டலத்துக்கு மேலே உயர்ந்து திகழும் மலையாதலின் 'மஞ்சினில் திகழ்தரும் மலை' என்றார். விஞ்சை - வித்தை, தான் கற்றிருந்த அற்புத வித்தை வன்மையால் நளன் மலைகளைத் தாங்கினான் என்பதால் 'விஞ்சையில் தாங்கினன்' என்றார் கம்பர் தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளலை இங்குக் கூறியது செய்ந்நன்றி மறவாத பண்பால் என்க. சடையப்ப வள்ளலின் கொடைத்திறம். தஞ்சமென வந்தவரை ஆதரித்தல் இங்கு சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. நளன்பற்றிக் கூறிய உயர்வு நவிற்சிக்குச் சடையப்பர் வள்ளன்மை உவமையாயிற்று. உவமேயம், உவமை இரண்டிலே உவமையே உயர்ந்தது என்பது இலக்கண வழி; அவ் வழியை மனங் கொண்டு சடையப்பரின் பெருமையை உய்த்துணர்க. |
(9) |
சேது கட்டும் போது நிகழ்ந்த நிகழ்ச்சிகள் |
6683. | சயக் கவிப் பெரும் படைத் தலைவர் தாள்களால், |
| முயல் கறை மதி தவழ் முன்றில் குன்றுகள் |
| அயக்கலின், முகில் குலம் அலறி ஓடின; |
| இயக்கரும் மகளிரும் இரியல்போயினார். |
|
சயக் கவிப் பெரும் படைத்தலைவர்- வெற்றி மிக்க வானரப் பெரும்படையின் தலைவர்கள்; தாள்களால்- தம் கால்களினாலே; முயல் கறை மதி தவழ்முன்றில் குன்றுகள்- முயல் போன்ற களங்கத்தை உடைய சந்திரன் தவழும்படியான மலைகளை; அயக்கலின்- அசைப்பதனால்; முகில் குலம் அலறி ஓடின- மேகக் கூட்டங்கள் அரற்றிக் கொண்டு ஓடின; இயக்கரும் மகளிரும்- அம்மலைகளில் இருந்த இயக்கர்களும் அவர்களது மனைவிமார்களும்; இரியல் போயினார்- மலைகளை விட்டு நீங்கிச் செல்வாராயினர். |
வெற்றிமிக்க வானரப் படையை 'சயக் கவிப் பெரும்படை' என்றார். வானரப் படைத் தலைவர்கள் வெற்றியைக் கவிகளாற் பாடிப் புலவர் சிறப்பித்தனர் என்பதாம். (சயக் கவி - வெற்றியைப் போற்றும் கவிதைகள்) மலைகளின் உயர்ச்சி தோன்ற 'மதி தவழ் குன்று' என்றார் அயக்கல் - அசைத்தல் (சகர-யகரப் போலி) |
(10) |
6684. | வேருடை நெடுங் கிரி தலைவர் வீசின, |
| ஓர் இடத்து ஒன்றின்மேல் ஒன்று சென்றுக, |