ஓர் பூடும் ஆட்டல் இலாய- ஒரு புல் பூடும் ஆடுதல் இல்லை ஆயின. |
ஓட்டர் - விரைந்தோடும் தூதுவர். காடு - முல்லை நிலம், நாடு, மருதநிலம். நளிர்கடல் - குளிர்ந்த கடல். கடல்நாடு - நெய்தல், வானரங்கள் மரங்களையும் கற்களையும் பூமியெங்கும் தேடிக் கொண்டு வந்து, அணைகட்டக் கடலில் போடுவதால் பூமியில் எங்கும் புல், பூடும் ஆடாதனவாயின என்பது கருத்து. இலாய - இல்லையாயின வானரங்களின் செயலால் முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நிலங்கள் மயங்கிக் கலந்தன. |
(64) |
6738. | வரைப் பரப்பும், வனப் பரப்பும், உவர் |
| தரைப் பரப்புவது என்ன, தனித் தனி |
| உரைப் பரப்பும் உறு கிரி ஒண் கவி; |
| கரைப் பரப்பும், கடற் பரப்பு ஆனதால். |
|
ஒண்கவி - மிகுதியான வானர வீரர்கள்; வரைப் பரப்பும் வனப் பரப்பும் - மலைநிலத்தையும், காட்டு நிலத்தையும்; உவர் தரைப் பரப்புவ தென்ன- கடலையடுத்த நெய்தல் நிலத்திலே கொண்டு வந்து பரப்புகிறது என்னும்படி; தனித்தனி உரைப் பரப்பும் உறுகிரி - தனித்தனியே மலைகளைக் கொணர்ந்து புகழ்மிகப் பரப்பி வைக்கும் அதனால்; கரைப் பரப்பு- கடலை அடுத்த நிலப்பரப் பெல்லாம்; கடற் பரப்பு ஆனதால் - கடல் தண்ணீர் பொங்கிக் கடலாக மாறியது. |
ஒண்மை - இங்கு மிகுதி குறித்தது. உவர்த்தரை- கடற்பகுதி. உரை - புகழ். 'ஒண்கவி தனித்தனி உரைபரப்பும்' என இயைத்து வானரம் ஒவ்வொன்றும் தமது செயலால் தனித்தனியே புகழ் பரப்பும் எனலும் பொருந்தும். |
(65) |
6739. | உற்றதால் அணை ஓங்கல் இலங்கையை, |
| முற்ற மூன்று பகலிடை; முற்றவும், |
| பெற்ற ஆர்ப்பு விசும்பு பிளந்ததால்; |
| மற்று இவ் வானம் பிறிது ஒரு வான்கொலோ? |
|
ஓங்கல் இலங்கையை முற்ற- திரிகூட மலையிலிருக்கும் இலங்கையை அடைய; மூன்று பகலிடை அணை உற்றது - மூன்று நாட்களிலே அணை தகுந்ததாயிற்று; முற்றவும் - அணைகட்டி முற்றுப் பெற்றவுடன்; பெற்ற ஆர்ப்பு - வானரங்களின் |