பக்கம் எண் :

432யுத்த காண்டம் 

6741.

மெய்யின் ஈட்டத்து இலங்கை ஆம் மென் மகள்,
பொய்யன் ஈட்டிய தீமை பொறுக்கலாது,
ஐயன் ஈட்டிய சேனை கண்டு, அன்பினால்
கையை நீட்டிய தன்மையும் காட்டுமால்.
 

மெய்யின் ஈட்டத்து- வாய்மையாகிய செல்வத்தை உடைய;
இலங்கையாம் மென்மகள் - இலங்கையாகிய மெல்லியல்புடைய
பெண்;    பொய்யன்   ஈட்டிய    தீமை  பொறுக்கலாது-
பொய்மையாளனாகிய  இராவணன் சேர்த்து  வைத்த  தீமையைப்
பொறுக்க  மாட்டாதவளாய்; ஐயன்  ஈட்டிய  சேனை கண்டு-
இராமன் தொகுத்த  வானர  சேனையைப்  பார்த்து; அன்பினால்
கையை நீட்டிய
- இராமபிரானிடம்  கொண்ட அன்பினாலே இரு
கைகளையும்   நீட்டி   அழைக்கின்ற;  தன்மையும்  காட்டும் -
தன்மையையும் இந்த அணை காட்டும்.
 

ஈட்டம்   -    செல்வம்     (ஈட்டப்படுவது       ஈட்டம்)
அயோத்யாகாண்டத்தில்   மிதிலையாகிய  மகள், "கைகளை நீட்டி, 
ஐயனை  ஒல்லைவாவென்றழைப்பது   போன்றது"  என்றது (480) 
ஒப்பு நோக்கத்தக்கது.
 

(68)
 

6742.

கான யாறு பரந்த கருங் கடல்,
ஞான நாயகன் சேனை நடத்தலால்,
'ஏனை யாறு, இனி, யான் அலது ஆர்?' எனா,
வான யாறு, இம்பர் வந்தது மானுமால்.
 

கானயாறு பரந்த கருங்கடல்- காட்டாறுகள் பலவும் வந்து
பரந்துள்ள கரிய கடலில்; ஞான நாயகன் சேனை நடத்தலால்-
ஞான   நாயகனான   இராமபிரானது  வானர சேனை நடப்பதால்;
ஏனையாறு இனி யானலது ஆர் எனா- என்னைத் தவிர வேறு
தகுந்த நெறியாவார் யாருளர் என்று; வானயாறு- விண்ணுலகிலுள்ள
ஆகாயகங்கை;   இம்பர்   வந்தது   மானும்  - இவ்வுலகிலே
வந்திருப்பதை ஒத்து இவ்வணை காணப்படும்.
 

ஞான நாயகன் - ஞானமே வடிவான் தலைவனான இராமபிரான்,
"ஞான  நாயகன்"  என  இராமபிரானைப் பின்னும் குறிப்பார் (8642)
மானும் - ஒக்கும். இம்பர் - இவ்வுலகம்.
 

(69)
 

6743.

கல் கிடந்து ஒளிர் காசுஇனம் காந்தலால்,
மற்கடங்கள் வகுத்த வயங்கு அணை,