| எல் கடந்த இருளிடை, இந்திரன் |
| வில் கிடந்தது என்ன விளங்குமால். |
|
கல்கிடந்து- (வானர வீரர் கடலில் எறிந்த) மலைகளில் கிடந்து; ஒளிர் காசினம் காந்தலால்- ஒளி வீசும் பலவகை மணித்திரள்கள் ஒளியை உமிழ்வதால்; மற்கடங்கள் வகுத்த வயங்கு அணை- வானர வீரர்கள் கட்டியதாய் விளங்குகின்ற அவ்வணை; எல்கடந்த இருளிடை- சூரியன் மறைந்த இரவு நேரத்திலே; இந்திரன் வில் கிடந்தது என்ன - வானத்திலே இந்திரவில் கிடந்தது போல; விளங்கும் - விளங்கலாயிற்று. |
கல் - மலை. மலைகளிலே கிடந்து ஒளி வீசும் பன் மணித்திரளைக் "கல் கிடந்து ஒளிர் காசினம்" என்றார். மற்கடம் - குரங்கு. எல் - சூரியன் 'எல்கடந்த இருள்' என்பதற்குப் பகலை வென்று விளங்கியஇருள் எனினுமாம். |
(70) |
சேது அமைந்தபின், சுக்கிரீவன் முதலினோர் இராமபிரானுக்குத் தெரிவித்தல் |
6744. | ஆன பேர் அணை அன்பின் அமைத்தனர், |
| கான வாழ்க்கைக் கவிக் குல நாதனும், |
| மான வேற் கை இலங்கையர் மன்னனும், |
| ஏனையோரும், இராமனை எய்தினார். |
|
ஆனபேரணை- இலங்கை செல்லுதற்கான பெரிய அணை; அன்பின் அமைத்தனர் - வானர வீரர்கள் அன்பாலே கட்டி முடித்தனர்; கான வாழ்க்கை - காடுகளிலே வாழுகின்ற வாழ்க்கையை உடைய; கவிக்குல நாதனும்- வானரக் கூட்டத்தின் தலைவனான சுக்கிரீவனும்; மான வேற்கை- பெருமைமிகுந்த வேலைப்படையாக கையில் தாங்கியுள்ள; இலங்கையர் மன்னனும் - இலங்கையில் வாழ்பவர்களுக்கு அரசனான வீடணனும்; ஏனையோரும் - மற்றுமுள்ள அனுமன், சாம்பவந்தன், அங்கதன் நீலன், முதலான வானரப்படையின் தலைவர்களும்; இராமனை எய்தினர் - இராமபிரானிடம் சென்று அடைந்தனர். |
'ஆன்' என்பதற்கு இலங்கை செல்லுதற்கான என்று விரித்துப் பொருள் கொள்ளலாம். வானர வீரர்கள் இராமபிரானிடம் கொண்ட அன்பினால்தான், அணைகட்டும் அரிய செயலைச் செய்து முடித்தார்களே அல்லாது வேறு எவ்விதப் பயனையும் எதிர் பார்த்துச் |