பக்கம் எண் :

434யுத்த காண்டம் 

செய்யவில்லை   என்பதால்  'அன்பின்  அமைத்தனர்' என்றார்.
பக்தியால்   அன்றிப்   பிற   வகையால்   நிறைவேற்றியிருக்க
முடியாத  கைங்கரியம்  என்பது  கவிஞர்  குறிப்பு.  காடுகளில்
சுற்றித்    திரிந்து    காய்    கனிகளை    உண்டு    வாழும்
குரங்குகளாதலின் 'கான  வாழ்க்கைக்  கவிக்குலம்' வேடராகிய
கண்ணப்பரின்  சாதனை போன்றது இது. அவர் சாதனை ஆறு
நாளில்; வானரரின் பக்திச் சாதனை மூன்று  நாளில் என அறிக.
மான  வேற்கை  என்பதற்குப்  பதிலாக  மான  வேலை என்ப
தொரு பாடமும்  கூறுவர். 'மான வேலை இலங்கை' என்பதற்கு
பெரிய கடல் சூழ்ந்த இலங்கை என்பது பொருளாகும்.
 

(71)
 

6745.

எய்தி, 'யோசனை ஈண்டு ஒரு நூறு இவை
ஐ-இரண்டின் அகலம் அமைந்திடச்
செய்ததால் அணை' என்பது செப்பினார்-
வைய நாதன் சரணம் வணங்கியே.
 

எய்தி  -   இராமபிரானை   அடைந்து;  வைய நாதன் -
உலகத்தின் நாயகனாகிய அந்தப் பெருமானது;சரணம் வணங்கி
- திருவடிகளைத் தொழுது; யோசனை ஈண்டு ஒரு நூறு- நூறு
யோசனை நீளம் உடையதாகவும்; இவை ஐயிரண்டின் அகலம்
- பத்து   யோசனை  அகலம் கொண்டதாகவும்; அமைந்திடச்
செய்ததால்   அணை
  -    அமைந்ததாக  அணை   கட்டி
முடிக்கப்பட்டது;   என்பது  செப்பினார் - என்ற செய்தியை
இராமபிரானிடம் சொன்னார்கள்.
 

(72)