அன்றோ" (திருவாய் ஈடு 6:9:3) எனக் கம்பர் பெருமானின் இக் கருத்தழகில் ஈடுபட்ட ஈட்டுரையாளர் நம்பிள்ளை, கம்பரின் இவ்வடியினையே எடுத்துக் காட்டியுள்ள திறம் ஓர்க. சீதையை விரைவில் அடைய உதவும் வாயில் இது ஆதலின், இதனைக் கண்டதும் சீதையைக் கண்டது போல் ஆயிற்று என்பார், "ஆவியனையாளைக் கண்டனன் என" என்றார். |
(2) |
6748. | நின்று, நெடிது உன்னினன், 'நெடுங் கடல் நிரம்பக் |
| குன்றுகொடு அடைத்து, அணை குயிற்றியது ஓர் |
| கொள்கை, |
| அன்று உலகு தந்த முதல் அந்தணன் அமைத்தான் |
| என்ற பொழுதின்கணும் இது என்று இயலும்?' |
| என்றான். |
|
நின்று நெடிதுஉன்னினன்- (இராமன்) அணையின் அருகே) நின்று, நெடுநேரம் சிந்தித்தவனாய்; நெடுங்கடல் நிரம்ப - 'நீண்ட அக்கடல் நிரம்புமாறு; குன்று கொடு அடைத்து - மலைகளைக் கொண்டு அடைத்து; அணை குயிற்றியது ஓர் கொள்கை - அணையை அமைத்தது (ஆகிய) ஒப்பற்ற (இச்) செயற்பாடு; அன்று- முன்பு; உலகு தந்த முதல் அந்தணன்- உலகினைப் படைத்த முதல்வனாகிய பிரமதேவனே;அமைத்தான் என்ற பொழுதின் கணும்- (இதனைச்) செய்யத் தொடங்கினான் என்றாலும்;இது என்று இயலும் என்றான்- இது எப்போது கை கூடும் என்று வியந்து கூறினான். |
குயிற்றுதல் - செய்தல். நான்முகன் சிற்பக் கலையில் சிறந்தான் என்பதனை. முன்பும் (கம்ப. 4862) கூறியது காண்க. |
(3) |
6749. | ஊழி முதல் நாயகன் வியப்பினொடு உவந்தான், |
| 'ஆழம் உரைசெய்யும் அளவே! இனி அது ஒன்றோ? |
| ஆழியில் இலங்கை பெரிது அத்திசையது ஆமேல், |
| ஏழு கடலும் கடிது அடைப்பர், இவர்' என்றான். |
|
ஊழி முதல்வன் - ஊழிக்காலங்களின் தோற்றத்திற்கும் முடிவுக்கும் காரணன் ஆகின்ற பரம் பொருளான இராமபிரான்; வியப்பினொடு உவந்தான் - வியப்பும் உவகையும் ஒருங்கடைந்தவனாகி; ஆழம் உரை செய்யும் அளவே! - (இக்கடலின் ஆழம்) உரைக்கவல்ல அளவினதோ! இனி அது ஒன்றோ?- இவ் வாழம் ஒன்று மட்டுமோ?; ஆழியின் இலங்கை பெரிது- இக்கடலால் |