சூழப் பெற்ற இலங்கை ஆகிய பெரிய நகரம்; அத் திசையது ஆமேல் - (ஏழுகடலுக்கும்) அப்பாற்பட்டது ஆனாலும்; இவர் ஏழு கடலும் கடிது அடைப்பர் என்றான்- இவ்வானரர்கள், அந்த ஏழு கடல்களையும் விரைவில் அடைத்து அணையமைத்துவிடுவர் என்று (வியப்போடு) கூறினான். |
யுகங்கள் முடிவதற்கும் தோன்றுவதற்கும் பரம்பொருளே காரணப் பொருளாதலின், "ஊழி முதல்வன்" என்றார். இராமனை முன்பு 'ஊழியார்' (3789) "ஊழியின் ஒருவனும்" (7585) என்பதும் காண்க. வியப்பு, புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம் எனும் நான்கின் அடியாகப் பிறக்கும். (தொல். மெய்ப். 7) இங்கு அணையைக் கண்ட இராமன் அதன் புதுமை, பெருமை, ஆக்கம் எனும் மூன்றாலும் வியப்படைந்தான். அதனைச் சமைத்த வானரங்களின் உருவச் சிறுமையாலும் வியப்படைந்து உவந்தான் என்பார், "வியப்பினோடு உவந்தான்" என்றார். |
(4) |
இராமன் படையொடு அணைவழிக் கடல் கடந்து போதல் |
6750. | நெற்றியின் அரக்கர்பதி செல்ல, நிறை நல் நூல் |
| கற்று உணரும் மாருதி கடைக் குழை வர, தன் |
| வெற்றி புனை தம்பி ஒரு பின்பு செல, வீரப் |
| பொன் திரள் புயக் கரு நிறக் களிறு போனான். |
|
நெற்றியின் அரக்கர் பதிசெல்ல - (படையின்) முன் முனையில் அரக்கர் மன்னனாகிய வீடணன் செல்லவும்; நிறை நல்நூல் கற்று உணரும் மாருதி - நிறைந்த சிறப்புற்ற நூல்களைக் கற்றுத் தெளிந்து உணர்ந்த அநுமன்;கடைக் குழை வர - சேனையின் பின்முனையிற் செல்லவும்; தன் வெற்றி புனை தம்பி- தனக்கு வரும் வெற்றியையே தன் அணியாகக் கொள்ளும் தம்பியாகிய இலக்குவன்; ஒரு பின்பு செல - தனக்குப் பின்பு ஒரு பக்கமாகச் செல்லவும்; வீரப் பொன் திரள்புயம் - வீரம் மிக்க அழகிய திரண்ட கைகளையுடைய; கருநிறக் களிறு போனான்- கரிய நிறம் பெற்ற ஆண்யானை போன்றவனான இராமபிரான் சென்றான். |
(5) |
6751. | இருங் கவி கொள் சேனை, மணி ஆரம் இடறி, தன் |
| மருங்கு வளர் தெண் திரை வயங்கு பொழில் மான, |
| ஒருங்கு நனி போயின-உயர்ந்த கரையூடே |
| கருங் கடல் புகப் பெருகு காவிரி கடுப்ப. |