பக்கம் எண் :

440யுத்த காண்டம் 

சான்றோர்   ஒரு   முகமாகப்   புகழ்தலின்   "ஓதிய   குறிஞ்சி
முதலாய" என்றார் - ஓதுதல் - புகழ்ந்து பாடுதல். அருந்துவன -
வினையாலணையும் பெயர் வானர சேனைக்கு வேண்டிய உணவுப்
பொருள்கள் மிகுதியாகக்  கொண்டு  செல்லப்பட்டன. என்பதைப்
போகிற போக்கில் உவமை வாயிலாக உரைத்தார்.
 

(7)
 

6753.

ஆயது நெருங்க, அடி இட்டு, அடி இடாமல்,
தேயும் நெறி மாடு, திரை ஊடு, விசை செல்ல,
போய சில பொங்குதொறு பொங்குதொறு பூசல்
பாய் புரவி விண் படர்வபோல், இனிது பாய்வ.
 

ஆயது- அந்த வானர சேனையில்; நெருங்க அடிஇட்டு-
நெருக்கத்தினால், ஓர் அடியைஇட்டு; அடி இடாமல் - அடுத்த
அடியை   எடுத்துக்    கீழே     வைப்பதற்கு     இயலாமல்
(இன்னொருவரின் அடியிடப்படுதலால்); நெறிதேயும் - (செல்ல)
வழியின்றிப்   போகும்;   மாடுதிரை    ஊடு  -  (ஆதலால்)
அருகேயுள்ள கடல் அலைகளின்  இடையே; விசை செல்ல-
விரைவாகச் செல்ல; சில போய- சில  வானரங்கள் போயின;
பொங்க  தொறு   பொங்கு   தொறு  - (அப்படிச் சென்ற
வானரங்கள்)   (கடல்   அலைகள்)  பொங்கி    எழுந்தோறும்
எழுந்தோறும்;   பூசல்  பாய்புரவி  -   போரில்  பாய்கின்ற
குதிரைகள்; விண் படர்வ போல்- வானை நோக்கிப் பாய்வது
போல; இனிது பாய்வன- இனிதாகத் தாவிச் செல்வன ஆயின.
 

வானர   சேனையின்   நெருக்க  மிகுதியை  உரைத்தவாறு.
"அணையிடமில்லாமல், கடலுக்குள்ளே  போகின்ற  வானரங்கள்
திரை   பொங்குந்தோறும்  குதிரை ராவுத்தர்  ஒத்தன" என்பது
நயமான ஒரு பழைய உரை. தன்மைத் தற்குறிப்பேற்ற அணி.
 

(8)
 

6754.

மெய்யிடை நெருங்க, வெளியற்று அயலில் வீழும்
பொய் இடம் இலாத, புனலின் புகல் இலாத,
உய்விடம் அளிக்கும் அருளாளர் முறை உய்த்தார்
கையினிடை சென்று, கரை கண்ட கரை இல்லை.
 

மெய்யிடை நெருங்க- (போய வழியெல்லாம்) குரங்குகளின்
உடம்பே  இடம்  முழுதும்  நிறைந்திருத்தலால்;  வெளியற்று -
செல்லும் வெற்றிடம்  அற்று; அயலில்  வீழும் பொய் இடம்
இலாத
- பக்கத்தில் வீழ்வதற்கும்  காலியிடம்   பெறாதனவாய்;
புனலின் புகல் இலாத- (நெருக்கில் சிக்குண்டு கடல்) நீரிலும்
விழ