| தானுடை வரத்தை எண்ணி, தருமத்தின் |
| தலைவர்தாமே |
| மானுட வடிவம் கொண்டார்" என்பது ஓர் வார்த்தை |
| இட்டார். |
|
கான் இடை வந்தவாறும்- (அந்த இராமபிரான்) வனத்திற்கு வந்த விதமும்; வானவர் கடாவவே ஆம்- தேவர்களின் உந்துதலினாலே யாம்; மீன் உடை வேலை விலங்கல் மேல் அகழி - மீன்களையுடைய கடலை அகழியாகக் கொண்ட திரிகோண மலையின் மேல் அமைந்த; இலங்கை வேந்தன் - இலங்கை நகரின் வேந்தனாகிய இராவணன்; தான் உடை வரத்தையெண்ணி- தான் அடைந்துள்ள வரத்தினைக் கருதி; தருமத்தின் தலைவர் தாமே - அறத்தின் நாயகனான பரம் பொருளே; மானுட வடிவம் கொண்டார் - மானிட வடிவத்தை ஏற்று (இராமனாக) வந்துள்ளார்;என்பது ஓர் வார்த்தை இட்டார் - என்பதான ஒரு மொழியையும் சொன்னார்கள். |
விலங்கல்-மலை. |
(79) |
|
6825. | ' "ஆயிரம் உற்பாதங்கள் ஈங்கு வந்து அடுத்த" |
| என்றார்; |
| "தாயினும் உயிர்க்கு நல்லாள் இருந்துழி அறிய, |
| தக்கோன் |
| ஏயின தூதன் எற்ற, பற்று விட்டு, இலங்கைத் |
| தெய்வம் |
| போயினது" என்றும் சொன்னார்; "புகுந்தது, போரும்" |
| என்றார். |
|
ஈங்கு- இவ்விலங்கை நகருக்கு; ஆயிரம் உற்பாதங்கள் - ஆயிரமாயிரம் கெடுகுறிகள்; வந்து அடுத்த என்றார் - வந்து நிகழ்ந்துள்ளன என்றார்கள்; தாயினும் உயிர்க்கு நல்லாள் - அன்னையைக் காட்டிலும் உயிர்க்குலத்துக்கு அன்பு செய்யும் நல்லவளாகிய சீதை; இருந்துழி அறிய- இருக்கும் இடத்தை யறிந்து கொள்ள; தக்கோன் - தகுதியில் சிறந்த இராமபிரான்; ஏயின தூதன் - அனுப்பிய தூதனாம் அனுமன்; எற்ற- தாக்கியதனால்; பற்று விட்டு - காவல் தொழிலை நீத்து; இலங்கைத் தெய்வம் |