பக்கம் எண் :

 ஒற்றுக் கேள்விப் படலம் 491

போயினது - இலங்கையின் காவல் தெய்வமாகிய இலங்கிணியும்
(இலங்கையை  விட்டு)  நீங்கி  விட்டாள்; என்றும் சொன்னார்
- என்பதும்  உரைத்தார்கள்; "புகுந்தது போரும் என்றார்" -
யுத்தம் (இலங்கைக்குள்) (அனுமன்  வடிவில்) நுழைந்து விட்டது
என்றும் சொன்னார்கள்.
 

உலகத்தாய் உயிர்கட்கு, ஒரு பிறப்புக்கே அன்பு காட்டுவாள்;
பிராட்டி பிறவி தோறும் அன்பு  காட்டிப் பேணும் பெருந்தாயாம்
உலோகமாதா   ஆதலின்   "தாயினும்   உயிர்க்கு    நல்லாள்" 
எனப்பட்டாள். 
 

(80)
 

6826.

' "அம்பினுக்கு இலக்கம் ஆவார் அரசொடும்  

அரக்கர் என்ன,

 

நம் பரத்து அடங்கும் மெய்யன், நாவினில் பொய்

இலாதான்,

உம்பர் மந்திரிக்கும் மேலா ஒரு முழம் உயர்ந்த  

ஞானத்

 

தம்பியே சாற்றிப் போனான்" என்பதும் சமையச்

சொன்னார்.

  

நம் பரத்து அடங்கும் மெய்யன்- உடம்பால் நம் இனத்தைச்
சார்ந்தவனும்;   நாவினில்   பொய்  இலாதான் - (ஆனால், நம்
நிலைக்கு  மாறாக)  நாவால்  பொய்யே  உரையாதவனும்; உம்பர்
மந்திரிக்கும்    மேலா  
-    தேவர்களின்    அமைச்சனான
பிருகற்பதியைக் காட்டிலும் மேலாக; ஒரு  முழம் உயர்ந்த - ஒரு
முழம்  உயர்ந்தவனும் ஆன; ஞானத் தம்பியே  - (உன்) ஞானத்
தம்பியாகிய   வீடணனே;   அரசொடும் அரக்கர் -  அரசாளும்
(இராவணனாகிய)   உன்னோடும்  சேர்ந்து (எல்லா) அரக்கர்களும்;
அம்பினுக்கு  இலக்கம்   ஆவார்  என்ன- (இராமபிரானின்)
கணைகளுக்கு இலக்காகி அழிவார்கள் என்று; சாற்றிப் போனான்
- உரைத்து   வெளியேறினான்; என்பதும்  சமையச் சொன்னார்
- என்னும் செய்தியையும் பொருந்தக் கூறினார்கள்.
 

பரம் - சார்பு, இனம். உடம்பால்  நம்  இனத்தவன் ஆயினும்,
நாவிலும்  ஞானத்திலும்  நமக்கு   அப்பாற்பட்டவன்   வீடணன்
என்பது   குறிப்பு.   தேவர்க்கு    அமைச்சனும்  குலகுருவுமான
பிருகற்பதி எனப்படும் வியாழபகவான் கல்விக்கும் ஞானத்திற்கும்
அதிபதி   என்பது   சோதிட   நூல் துணிபு.  அத்தகைய வியாழ
பகவானிலும் ஒரு முழம் உயர்ந்த