ஞானமுடையவன் வீடணன் என்று வீடணனின் கல்வியும் ஞானமும் கவிஞர் பிரானால் உச்சப்படுத்தப்படும் திறம் ஓர்க. அறவாழியந்தணனைச் சார்ந்த வீடணனின் ஞானம் ஞானத்தின் அதிபதியின் ஞானத்தைக் காட்டிலும் மேல் உயர்ந்தது என்பது கவிஞர் பிரானின் துணிபு. எப்படி யளந்தாலும் வீடணன் ஞானம் ஞானாதிபதியுடையதைக் காட்டிலும் ஒரு முழம் உயர்ந்தே இருக்கும் என்று வழக்காறுபட மொழிந்தார். |
(81) |
6827. | 'ஈது எலாம் உணர்ந்தேன் யானும்; என் குலம் இறுதி |
| உற்றது |
| ஆதியின் இவனால் என்றும், உன்தன்மேல் |
| அன்பினாலும், |
| வேதனை நெஞ்சின் எய்த, வெம்பி, யான் விளைவ |
| சொன்னேன்; |
| சீதையை விடுதிஆயின், தீரும் இத் தீமை' என்றான். |
|
ஈது எலாம் யானும் உணர்ந்தேன்- இவ்வாறு பிறர் கூறிய யாவற்றையும் நான் அறிந்தேன் (ஆதலாலும்); இவனால்- இத்திருமாலால்;என் குலம் ஆதியில் இறுதி உற்றது என்றும்- என்னுடைய அரக்கர் குலம் அழிவுற்றது என்ற காரணத்தாலும்; உன் தன்மேல் அன்பினாலும் - உன்மேல் நான் கொண்டுள்ள அன்பின் காரணத்தாலும்; நெஞ்சின் வேதனை எய்த- என் மனத்தில் எழுந்த துன்பத்தால்; வெம்பியான் விளைவ சொன்னேன் - (கொதித்து) வெதும்பி இனி விளையவுள்ளவற்றை நான் (உனக்குச்) சொன்னேன்; சீதையை விடுதியாயின் - பிராட்டியைச் சிறையிலிருந்தும் விட்டு விட்டாயானால்; இச்சிறுமை தீரும் - உனக்கினி நிகழவுள்ள அத்தனை துன்பங்களும் விலகிவிடும்; என்றான்...- என்று கூறி முடித்தான் (மாலியவான்). |
சீதையைச் சிறை வைத்திருப்பது, உன் போன்ற மாமன் புரிய உரிய செயல் அன்று; சிறிய செயல் என்பான். "தீரும் இச்சிறுமை" என்றான். சிறிய செயல்கள் துன்பமே நல்குமாதலின் சிறுமை துன்பத்தையும் குறித்து நின்றது. |
(82) |
மாலியவான் அறிவுரையை இராவணன் இகழ்தல் |
6828. | 'மற்று எலாம் நிற்க, அந்த மனிதர் வானரங்கள், |
| வானில் |
| இற்றை நாள் அளவும் நின்ற இமையவர் என்னும் |
| தன்மை |