பக்கம் எண் :

 ஒற்றுக் கேள்விப் படலம் 493

 

சொற்றவாறு அன்றியேயும், "தோற்றி நீ" என்றும்

சொன்னாய்;

 

கற்றவா நன்று! போ' என்று, இனையன 

கழறலுற்றான்:

   

மற்று எலாம் நிற்க- (நீ உரைத்தவற்றுள்) மற்றைய செய்திகள்
எல்லாம் (ஒருபுறம்) இருக்கட்டும்; அந்த மனிதர், வானரங்கள்-
(என்னை நோக்கி) அந்த  இராம  லக்குவர்,  குரங்குகள்; வானில்
இற்றை நாள் அளவும்
- வானுலகில்  இன்று வரையிலும்; நின்ற
இமையவர்
-  (என்னை   எதிர்க்க   இயலாது   பணிந்து) நின்ற
தேவர்கள்;   என்னும்   தன்மை -   என்னும்  (இவர்களின்)
இயல்புகளைச்;   சொற்றவாறு  அன்றியேயும் - சொன்னதோடு
நிற்காமல்; "நீ தோற்றி- "நீ தோற்பாய்" என்றும் சொன்னாய் -
என்றும் கூறினாய்; கற்றவா நன்று போ! - நீ கற்றுள்ள அரசியல்
நூல்களின் திறம் நன்று போ! என்று இனையன கூறல் உற்றான்
(மேலும்) இத்தகைய மொழிகளைக் கூறத் தொடங்கினான்.
 

தேவர்,  மானுடர்,   வானரங்கள்  ஆகியோர்  தன்மைகளை
மாலியவான்    கூறியதைக்   கேட்டுச்   சகித்த இராவணன், "நீ
தோற்பாய்"  என்று     கூறிய       சொற்களுக்கு     மட்டும்
பொறுக்கமுடியாதவன்  ஆனான்  என்பது  கருத்து.   "என்னும்
தன்மை"   என்பதன்  இடையே  "இவர்கள்"   எனும்    சொல்
பொருட்சிறப்புக்  கருதி வருவிக்கப்பட்டது. "கற்றவா நன்று போ!"
என்பது  கவிஞர் பெருமான்  உயிராற்றலோடு  உரையாடல்களை
அமைக்குத் திறத்திற்கு மேலும் ஒரு சான்றாய் நின்றது. 
 

(83)
  

6829.

'பேதை மானிடவரோடு குரங்கு அல, பிறவே ஆக,

 

பூதல வரைப்பின் நாகர் புரத்தின் அப் புறத்தது ஆக,

 

காது வெஞ் செரு வேட்டு, என்னைக் காந்தினர் 

கலந்த போதும்,

 

சீதைதன் திறத்தின்ஆயின், அமர்த் தொழில்

திறம்புவேனோ?

  

பேதை   மானிடவரோடு -  அறிவற்ற மனிதர்களுடனே; 
குரங்கு அல
- குரங்கினங்கள் மட்டும் அல்ல; பிறவே ஆக -
வேறு  உயிர்கள்  எல்லாம்  (ஒன்று கூடினும்) கூடட்டும்; பூதல
வரைப்பின்
  -   இம்மண்ணுலக   எல்லை; நாகர் புரத்தின் -
(ஆகட்டும்) நாகர் உலகம் (ஆகட்டும்) இவற்றிற்கு; அப்புறத்தது
ஆக
- அப்பாற்பட்ட வானுலகமே தான் ஆகட்டும்;காது வெம்
செருவேட்டு
- அழிக்கும்