பக்கம் எண் :

494யுத்த காண்டம் 

கடும்போரினை விரும்பி; காந்தினர்- மனக்கொதிப்புடையவராய்; 
என்னைக்   கலந்தபோதும்  -   என்னை  என் பகைவர்கள்
நெருங்கின போதும்;   சீதை   தன்  திறத்தின்- (அப்போர்)
சீதையைப்  பெறும் பொருட்டாக  என்றால்;  அமர்த் தொழில்
திறம்புவேனோ?
- போர் இடுவதிலிருந்தும் பின் வாங்குவேனோ?
(வாங்கேன்!).
 

தன் திறம்  உணராது  என்னை எதிர்க்க வந்துளர் ஆதலின்
இராமலக்குவரைப்  "பேதை  மானிடவர்" என்றான். திறம்புதல் -
பின்னிடுதல். காந்துதல்-நெஞ்சு கொதித்தல்.
   

(84)
 

6830.

'ஒன்று அல, பகழி, என் கைக்கு உரியன; உலகம்

எல்லாம்

 

வென்றன; ஒருவன் செய்த வினையினும் வலிய; 

"வெம் போர்

 

முன் தருக" என்ற தேவர் முதுகு புக்கு அமரில் 

முன்னம்

 

சென்றன; இன்று வந்த குரங்கின்மேல் 

செல்கலாவோ?

  

என் கைக்கு உரியன - என்  கரங்களில் உலவுகின்றனவும்;
உலகம் எல்லாம் வென்றன - உலகங்கள் யாவையும்  வென்று
தீர்த்தனவும்;   ஒருவன்   செய்த   வினையினும்  வலிய-
(தப்பாமல்   தாக்குவதில்)   ஒருவன்  புரிந்த   வினைகளை விட
வலிமை வாய்ந்தனவும்; முன் வெம்போர் தருக என்ற தேவர்-
(என்)  முன்  வந்து  போர் தருக  என்று எதிர்நின்ற தேவர்கள்;
முதுகு  புக்கு - (பின்னிட்டு ஓடுமாறு)  முதுகுகளில்  ஊடுருவி;
அமரில் முன்னம்  சென்றன - போர்க்களத்தில்  அவர்களின்
முன்னே சென்றனவுமாகிய;   ஒன்று அல பகழி- ஒன்றல்லாத
மிகப் பலவான  அம்புகள்;  இன்று  வந்த  குரங்கின்மேல் -
இப்போது   வந்துள்ள  குரங்குகளின் மேல்; செல்கலாவோ? -
செல்லும் வலிமையற்றன ஆகி விடுமோ? (விடா.)
  

(85)
 

6831.

'சூலம் ஏய் தடக் கை அண்ணல்தானும், ஓர்

குரங்காய்த் தோன்றி

 

ஏலுமேல், இடைவது அல்லால், என் செய வல்லன் 

என்னை?