| வேலை நீர் கடைந்த மேல்நாள், உலகு எலாம் |
| வெருவ வந்த |
| ஆலமோ விழுங்க, என் கை அயில் முகப் பகழி? |
| அம்மா!* |
|
சூலம் ஏய் தடக்கை அண்ணல் தானும்- சூலம் என்னும் படைக்கருவியை ஏந்தியுள்ள அகன்ற கரமுடைய பெருமைக்குரிய சிவபெருமானும்; ஓர் குரங்காய்த் தோன்றி- ஒரு குரங்காய்த் தோற்றமுற்றும்; ஏலுமேல் - (என்னோடு) போரில் எதிர்த்து நிற்பான் எனில்; இடைவது அல்லால்- (எனக்கு) பின்னிடுவானே அல்லாமல்; என்னை என் செய வல்லான்? - என்னை என்ன செய்துவிட வல்லவன்? என் கையில் அயில் முகப் பகழி விழுங்க - என் கரத்தினில் உள்ள கூர்முகமுடைய அம்புகள் (அச்சிவபிரான் எளிதில்) விழுங்கி விடுவதற்கு; வேலை நீர் கடைந்த மேல்நாள்- கடல் நீரைக் கடைந்த முன்னாளில்; உலகு எலாம் வெருவ வந்த- உலகம் யாவையும் அஞ்சி நடுங்குமாறு அக்கடலில் தோன்றிய; ஆலமோ?- நஞ்சோ? (இல்லை என்றபடி). |
நஞ்சோ?-ஓகாரம் எதிர்மறை. முத்தலைச் சூலம். அண்ணல் - தலைமைக்குரிய சிறப்பினன். சிவபிரானை அண்ணல் எனச் சுட்டுவதால், கவிஞர் பிரானின் சமய சமரசப்பேருள்ளம் புலனாம். நான் வழிபட்டுயர்ந்த சிவனே குரங்காய் வந்திருந்தாலும், நான் பெற்றுள்ள வரத்தால் யார் என்னை என்ன செய்து விட முடியும்? எனக் கேட்கும் இராவணனின் இக்கூற்றால், அவன் ஆணவத்தின் கொடுமுடியில் ஏறியமர்ந்துள்ளமை கூறப்பட்டது. |
(86) |
6832. | 'அறிகிலை போலும், ஐய! அமர் எனக்கு அஞ்சிப் |
| போன |
| எறி சுடர் நேமியான் வந்து எதிர்ப்பினும், என் கை |
| வாளி |
| பொறி பட, சுடர்கள் தீயப் போவன; போக்கிலாத |
| மறி கடல் கடைய, வந்த மணிகொலாம், மார்பில் |
| பூண? |
|
ஐய! - ஐயனே! அமர் எனக்கு அஞ்சிப்போன- போரில் (என் முன் நிற்க இயலாது) அஞ்சி ஓடிய; சுடர் எறி நேமியான் - ஒளி வீசுகின்ற சக்கரப் படையை ஏந்தியவனான திருமாலே; வந்து எதிர்ப்பினும் - (எனக்கு எதிர் நின்று) தாக்கினும்; என் கை வாளி |