பக்கம் எண் :

496யுத்த காண்டம் 

பொறிபட - என் கரங்களில் உள்ள அம்புகள் தீப்பொறிகளைச்
சிந்தியவாறு;   சுடர்கள்   தீய - (ஞாயிறு, திங்கள், தீ) எனும்
முச்சுடர்களும்  கரிந்து  போகுமாறு;  போவன  - ஏகவல்லன;
(அவ்வம்புகள்) மறிகடல்  கடைய  - அலைகின்ற  கடலைக்
கடையும்போது; போக்கிலாத  வந்த மணி கொல் ஆம்? -
போகும்  இடம் அறியாமல்  (திருமால்மார்பினை   வந்தடைந்த
கௌத்துவ) மணியாகுமோ? (ஆகாது);  அறிகிலை போலும் -
இதனை நீ அறியாய் போலும்!
 

"நேமியானே   வந்து   எதிர்ப்பினும்"  என  வரவேண்டிய
தேற்றேகாரம் மறைந்து  நின்றதால் விரிக்கப் பெற்றது. "போக்கு
அறு  பனுவல்"  (தொல். பாயிரம்)  என்பதில்,  போக்கு குற்றம்
எனும்  பொருளில்  வந்துள்ளது. நேமி - ஆழிப்படை, சக்கரம்.
மார்பில்  பூணவாளி  மணியன்று  என்பதனால் அது மார்பைப்
பிளக்கும்     என்பது    குறிப்பு.  திருமால், புறமுதுகிட்டதாக
இராவணன் முன்பும் (6182, 6186) உரைத்துள்ளான். 
 

(87)
  

6833.

'கொற்றவன், இமையோர் கோமான், குரக்கினது 

உருவம் கொண்டால்,

 

அற்றை நாள், அவன்தான் விட்ட அயிற்படை 

அறுத்து மாற்ற,

 

இற்ற வான் சிறைய ஆகி விழுந்து, மேல் எழுந்து 

வீங்காப்

 

பொற்றை மால் வரைகளோ, என் புய நெடும்

பொருப்பும்? அம்மா!'

 

கொற்ற   வாள்  இமையோர்  கோமான்- வெற்றியைக்
கொண்ட   வாள்   ஏந்தும்    தேவர்தலைவனான   இந்திரன்;
குரக்கினது உருவம் கொண்டால் - குரங்கினுடைய வடிவம்
கொண்டுள்ளான்   என்றால்;   அற்றை   நாள் - (மலைகளின் 
சிறகுகளை அரியத் தொடங்கிய) அக்காலத்தில்; அவன் விட்ட-
அவ்   இந்திரன்  விடுத்த; அயிற் படை - கூரிய வச்சிராயுதம்;
அறுத்து   மாற்ற- அறுத்து   வேறாக்கியதால்; வான் இற்ற
சிறைய  ஆகி 
-  வானில்   (பறப்பதற்கு   இயலாத) ஒடிந்த
சிறகுகளையுடையனவாகி;   விழுந்து  -  கீழே வீழ்ந்து; மேல்
எழுந்து   வீங்கா
- மேல்  கிளம்பிப்  பறக்க இயலாத; மால்
பொற்றை வரைகளோ
-  பெருமைக்குரிய  சிறு குன்றுகளோ;
என்புய நெடும் பொருப்பும்? - என்னுடைய  தோள்களாகிய
பெருமலைகளும்?