பக்கம் எண் :

 ஒற்றுக் கேள்விப் படலம் 497

மலைகளுக்கெல்லாம்   இருந்த   சிறகுகளை  இந்திரன் தன்
வச்சிராயுதத்தால்  அடித்து அழித்தான் என்பது  புராணச் செய்தி.
பொற்றை - சிறுகுன்றுகள். மால்வரை - பெருமைக்குரிய மலைகள்.
பெருமை   இகழ்ச்சிக்   குறிப்பாயிற்று.   இந்திரன்  வச்சிரத்தால் 
அடித்து வீழ்த்த என் புயமலைகள் அன்றைய  பொற்றைக் கற்கள்
அல்ல; பெருமலைகள் என்பான். "புயநெடும் பொருப்பும்" என்றான்.
மாலியவான்  கூறிய  கருத்துக்களின்  சாரத்தை யெல்லாம் வாங்கி 
ஒன்று   விடாமல்  ஆணித்தரமாக,  நெற்றியில் அறைந்தாற்போல்
ஆணவ   உச்சியில்    அமைந்துள்ள   இராவணனை  விடைதர
வைத்துள்ள கவிஞர் பிரானின்   உரையாட்டுத்   திறம்   வியக்க
வைப்பது. 'அடித்தவுடன்  வீழ, என்  தோள்கள் என்ன பொத்தை
மலைகளா?" எனக்  கேட்டு, இராவணன்  தோள்கள்  மலையினும்
வலியன என உணர்த்தியவாறு 
 

(88)
 

கதிரவன் தோற்றம்
 

6834.

உள்ளமே தூது செல்ல, உயிர் அனார் உறையுள் 

நாடும்

 

கள்ளம் ஆர் மகளிர் சோர, நேமிப்புள் கவற்சி நீங்க,

 

கொள்ளை பூண்டு அமரர் வைகும் குன்றையும் 

கோட்டில் கொண்ட

 

வெள்ள நீர் வடிந்தது என்ன, வீங்கு இருள் 

விடிந்தது அன்றே.

  

உள்ளமே தூது செல்ல - மனமே தூதுப் பொருளாகச் செல்ல;
உயிர் அனார் உறையுள் நாடும்- (தம்)  உயிரை ஒத்த காதலரின்
இருப்பிடம் நோக்கிச் செல்கின்ற; கள்ளம் ஆர் மகளிர் சோர -
வஞ்சனை  மிக்க  (நெறி பிறழும்  பெண்டிர்  உள்ளம்  வருந்தவும்; 
நேமிப்புள் கவற்சி  நீங்க
  -  (பகலில் அணையும்) சக்கரவாகப்
பறவைகள் கவலை  நீங்கவும்; கொள்ளை  பூண்டு -  மிகுதியாக
நிறைந்து; அமரர் வைகும்- தேவர்கள் வசிக்கின்ற; குன்றையும் -
மேருமலையையும்; கோட்டில் கொண்ட- உச்சிக்கோடு வரையிலும்
மூடி நிற்கின்ற; வெள்ள நீர் வடிந்தது என்ன - வெள்ளமானது நீர்
வடிந்தாற் போன்று; விலங்கு இருள் விடிந்தது- (உலகில்) பொங்கிப்
பருத்திருந்த இருட்டு அகன்றது.
 

மேருமலையினையும் மூடி  நின்ற ஒரு கறுப்பு வெள்ளம் மெல்ல
வடிந்தது போல இருள் விடிந்தது என  அழகுறக் கற்பித்தார். வான்
முகடு   வரையும்   இருள்   நிறைவதால்,   வான்  முட்ட நிற்கும்
மேருமலையின்