உச்சியை மறைத்திருந்த இலங்கையைச் சூழ்ந்துள்ள இராவண ஆட்சியின் இருளும், பிராட்டியின் துயரக் கொடுமுடியாம் சோக இருளும் விடிய இருப்பதைக் குறிப்பால் குறிப்பித்தவாறுமாம். |
(89) |
6835. | இன்னது ஓர் தன்மைத்து ஆம் என்று எட்டியும் |
| பார்க்க அஞ்சி, |
| பொன் மதில் புறத்து நாளும் போகின்றான்,-'போர் |
| மேற்கொண்டு |
| மன்னவர்க்கு அரசன் வந்தான்; வலியமால்' என்று, |
| தானும் |
| தொல் நகர் காண்பான் போல,-கதிரவன் தோற்றம் |
| செய்தான். |
|
இன்னது ஓர் தன்மைத்து ஆம்- (இலங்கை) இத்தகைய ஒரு தன்மையினை உடையது ஆகும்; என்று எட்டியும் பார்க்க அஞ்சி - என்று எட்டிப் பார்க்கவும் பயந்து (அதன்); பொன் மதில் புறத்து நாளும் போகின்றான் கதிரவன்- பொன்மயமான மதிலின் வெளியிலேயே நாள்தோறும் செல்பவனாகிய சூரியன்; - (இப்போது) போர் மேல் கொண்டு -போரை ஏற்றுக்கொண்டு; மன்னவர்க்கு அரசன் வந்தான் - அரசர்க்கு அரசனான இராமபிரான் வந்தனன்; வலியம் என்று- (ஆதலால்) நாம் வலிமை பெற்று விட்டோம் என்று; தானும் தொல் நகர் காண்பான் போலத் தோற்றம் செய்தான்- தானும் பழைய அந்த இலங்கை மாநகரைக் காண விரும்பியவன் போலக் (கீழ்வானில்) உதித்தான். |
தற்குறிப்பேற்ற அணி. புவியியல் அமைப்பால், இலங்கையின் உச்சிமேல் கதிரவன் இயங்காமையுணர்ந்த கவிஞர்பிரான், இராவணன் கொடுங்கோன்மைக்கு அஞ்சி இலங்கை மாநகரின் உட்செல்ல அஞ்சி, மதிற்புறத்தே கதிரவன் உலவ நேர்ந்தது எனத் தற்குறிப்பினை ஏற்றிக் காண்பித்தார். இப்போது, அறத்தின் நாயகனான இராமபிரான் இலங்கையின் தலைவாயிலில் படையோடு நிற்கும் வலிமை கண்டு, தானும் துணிவு பெற்று, இலங்கையின் உள் நுழைந்து எட்டிப் பார்க்கும் துணிச்சலோடு தோன்றுவான் போலத் தோன்றினான். இலங்கையில் கதிரவன் இயங்காமை (4855) முன்பும் (7014) பின்பும் கூறப்படும். "இருசுடர் இயங்காப் பெருமூதிலங்கை" எனப் புறத்திரட்டும் இப்பெருமை புகலும். "பகலவன் மீது இயங்காமைக் காத்த பதி வீரன்" (2. 10. 11) என இராவணன் இலங்கையின் இப்புகழ் தேவாரத்தினும் பேசப்படும். |
(90) |