பக்கம் எண் :

500யுத்த காண்டம் 

6837. 

செரு மலி வீரர் எல்லாம் சேர்ந்தனர் மருங்கு 

செல்ல,

 

இரு திறல் வேந்தர் தாங்கும் இணை நெடுங் கமலக் 

கையான்.

 

பொரு வலி வய வெஞ் சீயம் யாவையும் புலியும் 

சுற்ற,

அரு வரை இவர்வது ஆங்கு ஓர் அரிஅரசு  

அனையன் ஆனான்.

 

செருமலிவீரர் எல்லாம்- போர்புரியும் தன்மையுடைய வீரர்
யாவரும்; சேர்ந்தனர்  மருங்கு  செல்ல - திரண்டு பக்கத்தே
செல்ல;   இருதிறல்   வேந்தர்- இரண்டு   திறமை  வாய்ந்த
சுக்கிரீவன்,  வீடணன் என்ற  அரசர்க்கரசர்;  தாங்கும்- பற்றி 
தாங்கிச்   செல்லும்;   இணை  நெடும்  கமலக் கையான் -
இரண்டான     நீண்ட   செந்தாமரையனைய   கைகளையுடைய
இராமபிரான்; பொருவலி  வயவெஞ்சீயம் - போரிடும் வலிமை
வாய்ந்த திறல் மிக்க கொடிய சிங்கம் ஒன்று; யானையும் புலியும்
சுற்ற
  -  யானைகளும் புலிகளும்  சுற்றிவர; ஓர் அரி அரசு-
ஒப்பற்றதொரு இராச சிங்கம்; அருவரை  இவர்வது அனையன்
ஆனான்
-  அரிய குன்று  ஒன்றின் மேல் ஏறுவது போன்றவன்
ஆனான்.
 

இந்தப்   பாடலில்   வரும்  உவமைக் காட்சியைத் திரிசடை
கனவுபற்றிய பாடலொடு (5118) இணைத்துக் காண்க.
 

(2)
 

6838.  

கதம் மிகுந்து இரைத்துப் பொங்கும் கனை கடல் 

உலகம் எல்லாம்

 

புதைவு செய் இருளின் பொங்கும் அரக்கர்தம் 

புரமும்,பொற்பும்,

 

சிதைவு செய் குறியைக் காட்டி, வட திசைச் சிகரக்

குன்றின்,

 

உதயம்அது ஒழியத் தோன்றும், ஒரு கரு ஞாயிறு 

ஒத்தான்.

 

கதம்  மிகுந்து  -  சினம்  ஏறி; இரைத்துப் பொங்கும்-
அலையொலித்துப் பொங்குகின்ற; கனைகடல் உலகம் எல்லாம்-
ஆர்ப்பொலி  மிக்க கடல்  சூழ்ந்த உலகம் யாவும்; புதைவு செய்
இருளின்  பொங்கும்  அரக்கர்தம் 
-  தனதகத்தே  அழுந்தி
மறையுமாறு  செய்யும்  இருளைப்போலே  (பாவமாகிய  இருளால்)
பொங்கி