(உலகை அழிக்க உள்ள) அரக்கர்களுடைய; புரமும் பொற்பும்- நகராகிய இலங்கையும் அதன் அழகும்; சிதைவு செய்குறியைக் காட்டி- அழியப் போகின்ற அடையாளத்தைக் காண்பித்து; உதயமது ஒழிய - உதயகிரிச் சிகரத்திலே உதிப்பதை நீக்கி; வடதிசைச் சிகரத்தின் - வடதிசைக்கண் உள்ள ஒரு மலைச்சிகரத்தில்; தோன்றும் கரு ஞாயிறு ஒத்தான் - உதிக்கின்ற ஒரு கரிய சூரியனைப் போன்றவன் ஆனான் (இராமபிரான்). |
கதிரவன் உதய காலத்தே, சுவேலமலைமேல் நின்ற இராமபிரானை, வடக்கே உதித்த கரு ஞாயிறு என வருணித்தார். கருஞாயிறு இராமனுக்கு உவமை. "கட்டார்சிலைக் கருஞாயிறு புரைவான்" (9406); "கண்தாமரை போல் கருஞாயிறு என" (2610)" செந்தண் கமலக்கண் சிவந்த வாயோர் கருஞாயிறு, அந்தமில்லாக் கதிர் பரப்பி அலர்ந்தது. ஒக்கும் அம்மானே!" (திருவாய்: 8: 5: 7) என வருவன காண்க. உதயமது அது பகுதிப் பொருள் விகுதி. தன்மைத் தற்குறிப்பேற்ற அணி. |
(3) |
6839. | துமிலத் திண் செருவின் வாளிப் பெரு மழை |
| சொரியத் தோன்றும் |
| விமலத் திண் சிலையன், ஆண்டு ஓர் வெற்பினை |
| மேய வீரன், |
| அமலத் திண் கரமும் காலும் வதனமும் கண்ணும் |
| ஆன, |
| கமலத் திண்காடு பூத்த காள மா மேகம் ஒத்தான். |
|
துமிலத் திண்செருவின் - பேர்ஒலியுடன் எழும் வலிய போரில்; வாளிப் பெருமழை- அம்புகளாகிய பெரியமழை; சொரியத் தோன்றும்- பொழியுமாறு தோன்றும்; விமலத் திண்சிலையன் - மாசற்ற திண்ணிய வில்லை ஏந்தியவனாகி; ஆண்டு ஓர் வெற்பினை மேயவீரன் - அங்கே ஒரு மலையை யடைந்தவனாகிய இராமபிரான்; அமலத்திண் கரமும் காலும் வதனமும் கண்ணும் ஆன- தூய்மை பொருந்திய திருக்கைகளும், திருவடிகளும், திருமுகமும் திருக்கண்களும் ஆன; கமலத் திண்காடு பூத்த - வளமான தாமரைக்காடு பூத்துக் கிடக்கிற; காளமாமேகம் ஒத்தான் - கரிய பெரிய காளமேகம் போன்றவன் ஆனான். |
துமிலம் - பேரொலி, ஆரவாரம். தாமரைக்காடு அனையான் இராமன். ஒப்பு: (திருவாய்: 8: 5: 1). நீல மேனியிடை செந்நிற உறுப்புகள் |