பக்கம் எண் :

502யுத்த காண்டம் 

இயைந்து  பொலிவதைப்   புலப்படுத்தும்   இப்பாடல்  படிமம்.
கம்பரைப்    பெரிதும்    கவர்ந்திருக்கிறது;  அவர்  போற்றிய 
படிமத்துக்கு மூலம் ஆழ்வார் அருளிச் செயலே.
 

(4)
 

6840. 

மல் குவடு அனைய திண் தோள் மானவன், 

வானத்து ஓங்கும்

 

கல் குவடு அடுக்கி வாரிக் கடலினைக் கடந்த, 

காட்சி

 

நல் குவடு அனைய, வீரர் ஈட்டத்தின் நடுவண் 

நின்றான்.

பொன் குவட்டு இடையே தோன்றும் மரகதக்  

குன்றம் போன்றான்.

 

வானத்து  ஓங்கி கல்  குவடு அடுக்கி- ஆகாயத்தளவு
உயர்ந்த  கல்மலைகளை  யடுக்கி; வாரி கடலினைக் கடந்த
நீர் வருகையையுடைய கடலினைக் கடந்த; நல்குவடு  அனைய
காட்சி  வீரர்
- நல்ல  மலைகளை ஒத்தவராய்க் காட்சி  தரும்
வானர   வீரர்களின்;   ஈட்டத்தின்   நடுவண்  நின்றான்
கூட்டத்தில்   நின்றவனான;  மல்குவடு திண்தோள்-  வலிய
சிகரத்தை  ஒத்த  திண்ணிய  தோள்களையுடைய;  மானவன்-
மனுக்குலத்தில் தோன்றிய இராமபிரான்; பொன்குவடு இடையே
தோன்றும்
- பொன் மலைகளின் நடுவே காணப்படும்; மரகதக்
குன்றம் போன்றான்
- மரகத மலையைப் போன்று விளங்கினான்.
 

கற்குவடுகளைச் சுமந்த அவர்கள் தோள்கள்  பொற்குவடுகள்
ஆயின,     அப்பொற்குவடுகளுக்கிடையே     மரகதமலையென
இராமபிரான் நின்றான் என்பதாம். "எப்பொருளும் தானாய் மரகதக்
குன்றம்   ஒக்கும்"  (திருவாய் : 2: 5: 4);  "வள்ளலே! மதுசூதனா!
மரகத  மலையே!  (திருவாய் : 2: 6: 4)  என  நம்மாழ்வார் மரகத
மலை எனப் பரவுதல் இங்கு நினைவு கூரத் தகும். 
 

(5)
 

இராமன், இலங்கையின் சிறப்பை இளவலுக்குக் காட்டிக் கூறுதல்.
 

6841. 

அணை நெடுங் கடலில் தோன்ற, ஆறிய சீற்றத்து

ஐயன்,

பிணை நெடுங் கண்ணி என்னும் இன்னுயிர் பிரிந்த 

பின்னை,