| துணை பிரிந்து அயரும் அன்றிற் சேவலின் |
| துளங்குகின்றான், |
| இணை நெடுங் கமலக் கண்ணால் இலங்கையை |
| எய்தக் கண்டான். |
|
பிணை நெடுங்கண்ணி என்னும் - பெண்மானைப் போன்ற நீண்ட கண்களையுடைய சீதை என்கின்ற; இன்னுயிர் பிரிந்த பின்னை- இனிய (தன்) உயிரைப் பிரிந்த பிறகு; துணை பிரிந்து அயரும் அன்றில் சேவலின் துளங்குகின்றான் - துணையைப் பிரிந்து வாடும் ஆண் அன்றில் பறவை போல மனம் கலங்கியவனாய்; நெடுங்கடலில் அணைதோன்ற- நீண்டகடலில் அணை (கட்டப்பட்டுத்) தோற்றம் தருதலால்; ஆறிய சீற்றத்து ஐயன்- தணிந்த கோபத்தை யுடையவனான இராமபிரான்; நெடு இணைக் கமலக் கண்ணால் - நீண்ட இரு தாமரைக் கண்களாலும்; இலங்கையை எய்தக் கண்டான் - இலங்கை மாநகரை நன்றாக நோக்கினான். |
பிராட்டியைப் பெற நெடுங்கடல் குறுக்கே தடையாய்க் கிடப்பதால் எழுந்த சினம், அதற்கு அணை கட்டிய பின், பிராட்டியை அடைய வழி கிட்டிவிட்டதென ஆறத் தொடங்கியதால், "அணை தோன்ற ஆறிய சீற்றத்து ஐயன்" என்றார். கடலுக்கு அணையிட வழி செய்யாததால் வருணன் மேல் எழுந்த சீற்றம், இப்போது வடிந்துள்ளது என்க. பிராட்டி இராமபிரானின் இன்னுயிர் என்று இக்காவியத்தின் பல இடங்களில் வரும். (4020, 5305, 5306, 3474) |
(6) |
6842. | 'நம் திரு நகரே ஆதி வேறு உள நகர்கட்கு எல்லாம் |
| வந்த பேர் உவமை கூறி வழுத்துவான் அமைந்த |
| காலை, |
| இந்திரன் இருக்கை என்பர்; இலங்கையை எடுத்துக் |
| காட்டார் |
| அந்தரம் உணர்தல் தேற்றார்; அருங் கவிப் புலவர் |
| அம்மா! |
|
அருங்கவிப் புலவர் - (இராமபிரான் இலக்குவனை நோக்கி) (தம்பீ!) அரிய கவிதைகளைப் பாடவல்ல புலவர்கள் (எல்லாம்); நம்திரு நகரே ஆதி வேறு உள நகர்கட்கு எல்லாம்- நம் அழகிய அயோத்தி முதலான உலகில் உள்ள பிற நகரங்கள் யாவற்றிற்கும்;வந்த பேர் உவமை கூறி வழுத்துவான் அமைந்த காலை - உள்ளத்தில் |