எழுந்த உவமைகளைச் சொல்லிப் புகழத் தொடங்கிய பொழுது (எல்லாம்); இந்திரன் இருக்கை என்பார் - (உவமைப்பொருள் ஆக) தேவர் தலைவனாகிய இந்திரனின் இருப்பிடமான அமராவதி நகர் என்பார்கள்; இலங்கையை எடுத்துக்காட்டார் - (அதனினும் உயர்ந்த) (இந்த) இலங்கை மாநகரை உவமைப் பொருளாக எடுத்துக் காட்டமாட்டார்கள்; அந்தரம் உணர்தல் தேற்றார் - (அந்த அமராவதி நகருக்கும் இந்த இலங்கை மாநகருக்கும் உள்ள) வேறுபாட்டை அப்புலவர்கள் உணரும் தெளிவுடையார் அல்லர் (போலும்!). |
பேர் உவமை - உவமேயத்தைக் காட்டிலும் உயர்ந்த உவமை. "உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை" (தொல். உவம. 3) அந்தரம் - வேறுபாடு. புலவர் இலங்கைக்கும் அமராவதிக்கும் வேறுபாடு தெரியின், நம்திருநகரே யாதி வேறு உள நகர்கட்கெல்லாம் இந்திர இருக்கையாகிய அமராவதியை உவமிப்பதை விடுத்து, இந்த இலங்கை நகரத்தையோ எடுத்துக்காட்டுவர் என்பது கருத்து. |
(7) |
6843. | 'பழுது அற விளங்கும் செம் பொன் தலத்திடைப் |
| பரிதி நாண |
| முழுது எரி மணியின் செய்து முடிந்தன, |
| முனைவராலும் |
| எழுத அருந் தகைய ஆய, மாளிகை இசையச் |
| செய்த |
| தொழில் தெரிகிலவால், தங்கண் சுடர் நெடுங் |
| கற்றை சுற்ற. |
|
பழுது அறவிளங்கும் செம்பொன் தலத்திடை- குற்றமின்றி ஒளிரும் சிவந்த பொன்னினால் ஆன நிலத்தில்; பரிதி நாண - சூரியனும் நாணமுறும்படி; முழுது எரிமணியின் செய்து முடிந்தன - முற்றிலும் ஒளிர்கின்ற இரத்தினங்களால் செய்து முடிக்கப் பெற்றனவும்;முனைவராலும் எழுதருந்தகைய மாளிகை - முதிர்ந்த அறிவினராலும் வரைவதற்கு இயலாத மாளிகைகளில்; இசையச் செய்த தொழில் - பொருந்துறச் செய்துள்ள வேலைப்பாடுகள்; தங்கண் சுடர் நெடுங்கற்றை சுற்ற - அவற்றிலுள்ள (எரிமணிகளின்) ஒளிவீச்சு பார்ப்பார் விழிகளைக் கூசச் செய்வதனால்; தெரிகில- கட்புலன் ஆகவில்லை. |
"பொன் கொண்டிழைத்த? மணியைக் கொடு பொதிந்த? என் கொண்டிழைத்த எனத்தெரிகிலாத" (கம்ப. 4835) என்பார் முன்னும். |
(8) |